தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் – ‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவல் எதிரொலி!!

0
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் - 'ஓமிக்ரான்' வைரஸ் பரவல் எதிரொலி!!
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் - 'ஓமிக்ரான்' வைரஸ் பரவல் எதிரொலி!!
தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் – ‘ஓமிக்ரான்’ வைரஸ் பரவல் எதிரொலி!!

தமிழகத்தில் ஓமைக்ரான் வைரஸ் தடுப்பு பணியாக பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின் போது விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கலாச்சார நிகழ்வு:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து வெகு நாட்களுக்கு பிறகு முழுவதுமாக பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில் வழக்கம் போல பள்ளிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக ஓமைக்ரான் வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. ஏற்கனவே கொரோனா மூன்றாம் அலை வேகமெடுக்கும் இந்த வைரஸ் தொற்று குழந்தைகளை தான் அதிகமாக பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டிசம்பர் 6ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அரசு அனுமதி!

இந்த சூழலில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பான முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தற்போது புதிதாக பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று மீண்டும் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளில் பின்பற்றபட வேண்டிய அரசின் தொற்று தடுப்பு வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளில் பின்பற்ற பட வேண்டிய கொரோனா தடுப்பு வழிமுறைகள்:
  • 1-8ம் வகுப்பு வரை சுழற்சி முறையின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
  • மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது நுழைவு வாயிலில் அனைவருக்கும் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும்.
  • ஆசிரியர்கள் எப்போதும் முகக் கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். அவர்களையும் முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும்
  • பள்ளிகளில் மாணவர்களும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும்.
  • மேலும் பள்ளிகளில் மாணவர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக்கூடாது.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!