13000 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான பலன்கள் – முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!!

0
13000 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான பலன்கள் - முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!!
13000 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான பலன்கள் - முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!!

13000 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான பலன்கள் – முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள 13000 ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான பலன்கள் வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 2003ஆம் ஆண்டுடன் பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டு ஏப்ரல் 1, 2004 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு சாதகமான பல்வேறு சலுகைகள் மறுக்கப்பட்ட நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்கும் படி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு ஊதியத்தில் 50% மாதாந்திர ஓய்வூதியமாக பெறும் உரிமை உண்டு. ஆனால், புதிய திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், ஊழியர்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 13000 ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வருவதாக முதல்வர் சித்த ராமையா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கர்நாடகா மாநிலத்திலும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!