வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – Ola S1 Pro ஸ்கூட்டர் இலவசம்!

0
வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் அறிவிப்பு - Ola S1 Pro ஸ்கூட்டர் இலவசம்!
வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் அறிவிப்பு - Ola S1 Pro ஸ்கூட்டர் இலவசம்!
வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – Ola S1 Pro ஸ்கூட்டர் இலவசம்!

எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா சமீபத்தில் தனது ஓலா எஸ்1 ப்ரோ விற்பனையை மீண்டும் தொடங்கியது. இந்த முறை, சுமார் ரூ.1,39,000 மதிப்புள்ள Ola S1 Pro Gerua வாகனத்தை இலவசமாக வழங்க இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலவச வாகனம்

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆரம்பத்தில் இருந்ததை போல அல்லாமல் சமீபத்தில் மந்தமாக நகர்ந்து வந்தது. இதை கவனத்தில் கொண்ட அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான சலுகையை அறிவித்துள்ளது. அதாவது, ரூ.1,39,000 மதிப்பிலான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்குவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்து 200 கிமீக்கு மேல் ஓட்டுபவர்களுக்கு ஓலா எஸ்1 ப்ரோ ஜெருவா இலவசமாக வழங்கப்படும் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

அந்த வகையில் இந்த நிபந்தனையை முடிக்கும் முதல் 10 பேர் இந்த ஸ்கூட்டரை வெல்ல முடியும். இதுவரை, இரண்டு பேர் இந்த இலக்கை அடைந்து ஓலா எஸ்1 ப்ரோ ஜெருவா வாகனத்தை பரிசாக பெற்றுள்ளனர். மற்றவர்கள் இது சாத்தியம் என்று தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘உங்கள் உற்சாகத்தைப் பார்க்கும்போது, ஒரே சார்ஜில் 200 கிமீ தூரத்தைக் கடக்கும் மேலும் 10 வாடிக்கையாளர்களுக்கு இலவச ஜெருவா ஸ்கூட்டரை வழங்குவோம்! MoveOS 2 மற்றும் 1.0.16ல் தலா ஒருவர் இந்த சாதனையை செய்துள்ளனர்.

அதனால் உங்களில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்! வரும் ஜூன் மாதம் ஃபியூச்சர் பேக்டரியில் இருந்து வெற்றியாளர்களுக்கு ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஓலா எஸ்1 ப்ரோவின் விலை ரூ.10,000 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை எக்ஸ் ஸ்கூட்டர்களின் ஷோரூம் விலை ரூ.1,39,000 ஆகும். இந்த விலை மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத்தால் குறைகிறது கவனிக்கத்தக்கது.

Exams Daily Mobile App Download

ஆனால், ஓலா நிறுவனம் சமீபத்தில் OS 2.0 ஐ வெளியிட்டதாகவும், எனவே எஸ்1 ப்ரோவின் விலையை உயர்த்தியதாகவும் விளக்கமளித்தது. இந்த Ola S1 Pro வாகனம் 3.97 kWh பேட்டரியை உள்ளடக்கியது. இது, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 181 கிமீ தூரம் வரை செல்லும் திறனுடையது. இருப்பினும், 200 கி.மீ தூரத்தையும் இந்த பேட்டரி கடந்து செல்வதாக, வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும், Ola S1 Pro ஆனது போர்ட்டபிள் ஹோம் சார்ஜருடன் வருகிறது. இது, அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!