OLA S1 Electric Scooter அக்டோபர் முதல் விற்பனை – EMI, வாகன காப்பீடுகள் விளக்கம்!

0
OLA S1 Electric Scooter அக்டோபர் முதல் விற்பனை - EMI, வாகன காப்பீடுகள் விளக்கம்!
OLA S1 Electric Scooter அக்டோபர் முதல் விற்பனை - EMI, வாகன காப்பீடுகள் விளக்கம்!
OLA S1 Electric Scooter அக்டோபர் முதல் விற்பனை – EMI, வாகன காப்பீடுகள் விளக்கம்!

ஓலா நிறுவனத்தின் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்கூட்டர்களுக்கான EMI மற்றும் வாகன காப்பீட்டு விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஓலா ஸ்கூட்டர்

இந்தியாவில் புது முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட ஓலா எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் விற்பனை அக்டோபர் மாதம் முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா மின்சார வாகனங்கள் EMI மூலம் விற்பனையை துவங்குவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. அந்த வகையில் ஓலா S1 ஸ்கூட்டர்களின் விற்பனை, உலக EV தினத்தை முன்னிட்டு துவங்குவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்கனில் தாலிபான்களின் புதிய அரசு அமைப்பு – அதிபர் & அமைச்சரவை அறிவிப்பு!

இது தொடர்பாக நேற்று (செப்டம்பர் 7) ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓலா S1 ஸ்கூட்டர்களுக்கான மாதாந்திர தவணைகள் (EMI) ரூ.2,999 முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்பட்ட பதிப்பான ஓலா S1 ப்ரோவிற்கான EMI தொகை ரூ.3,199 லிருந்து தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் HDFC வங்கி, தகுதியான வாடிக்கையாளர்களுக்கு ஓலா மற்றும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான EMI கடன்களை வழங்கும்.

இது தவிர டாடா கேபிடல் மற்றும் IDFC வங்கியும், டிஜிட்டல் KYC செயலாக்கம் மூலம் தகுதியான வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன் ஒப்புதல்களை வழங்க உள்ளது. அந்த வகையில் ஓலா S1 க்கு ரூ.20,000 அல்லது ஓலா S1 ப்ரோவுக்கு ரூ.25,000 தொகையை முன்பணமாக செலுத்தலாம் என்றும் மீதமுள்ள தொகையை EMI மூலம் செலுத்திக்கொள்ளலாம் என்றும் ஓலா நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓலா நிறுவனத்தின் வாகன காப்பீட்டுகளை பொருத்தளவு, ஓலா மற்றும் ஓலா எலக்ட்ரிக் செயலி மூலம் வாகனங்களுக்கு காப்பீடுகளை செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித்தேர்வு – புதிய கோரிக்கை!

இந்த காப்பீடுகள் ஒரு ஆண்டு சொந்த சேதம் மற்றும் 5 ஆண்டுகள் மூன்றாம் தரப்பு சேதம் என்ற அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட விபத்து, ஜீரோ தேய்மானம் மற்றும் சாலையோர உதவி போன்ற பிற துணை நிரல்களிலிருந்தும் காப்பீடுகளை தேர்வு செய்யலாம். தவிர ஓலா S1 ஸ்கூட்டர், அதன் பேட்டரியில் மூன்று வருட உத்தரவாதத்துடன் வருகிறது. மேலும் ஓலா வாகனத்திற்கு மூன்று வருடங்கள் அல்லது 40,000 கிமீ பயன்பாடு வரை காப்பீடு உத்திரவாதம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!