Ola Electric Scooter S1 vs Honda Activa – இரண்டில் சிறந்த ஸ்கூட்டர் எது? ஒரு அலசல்!

0
Ola Electric Scooter S1 vs Honda Activa - இரண்டில் சிறந்த ஸ்கூட்டர் எது ஒரு அலசல்!
Ola Electric Scooter S1 vs Honda Activa - இரண்டில் சிறந்த ஸ்கூட்டர் எது ஒரு அலசல்!

Ola Electric Scooter S1 vs Honda Activa – இரண்டில் சிறந்த ஸ்கூட்டர் எது? ஒரு அலசல்!

ஓலா எஸ் 1 & ஹோண்டா ஆக்டிவா ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் இடையே ஆதிக்க போட்டிகள் தற்போது துவங்கியுள்ளது. இரண்டும் தற்போது புதிய தொழில்நுடபத்தில் களமிறங்கியுள்ளதால் அது குறித்த சுவாரசிய அலசலை காணலாம்.

ஸ்கூட்டர்கள்:

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் போக்குவரத்து வாகனம் என்றால் அது ஸ்கூட்டர்கள் ஆகும். அதன் விலை, தரம் மற்றும் மக்களின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஸ்கூட்டர்களே மக்களின் அதிகபட்ச விருப்ப தேர்வாக உள்ளது. சமீபத்திய நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமில்லாது புதிய தொழில்நுட்பத்தின் அறிமுகத்தினால் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையில் கடும் போட்டிகள் நிலவி வருகிறது.

Facebook ல் விரைவில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் – புதிய அம்சம் அறிமுகம்!

அவ்வாறு விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஆக்டிவா தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன் தரம், புதிய தொழில்நுட்பத்திற்கேற்ப மாறுபடும் தன்மை என ஹோண்டா ஆக்டிவா வாகனங்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. கடந்த மாதம் மட்டுமே, ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா முழுவதும் 1,62,956 யூனிட் ஆக்டிவாவை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக விற்கப்பட்ட ஸ்கூட்டராக உருவெடுத்துள்ளது.

Ola Electric Scooter S1 vs Honda Activa:

ஆனால் சமீபகாலமாக மின்சார வாகனங்கள் மீதே மக்களின் கவனம் அதிகமாக திரும்பியுள்ளது. அதற்கேற்ப Ola நிறுவனம் Electric Scooter S1 என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றிற்கு முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

Reliance Jio நிறுவனத்தின் ரூ.500க்கு குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம்!

S1 வாங்குபவர்களை ஈர்க்க பல அம்சங்களுடன் வந்தாலும், ஆக்டிவா நிறுவனத்தில் விலை கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஓலா எஸ் 1 டெல்லியில், ரூ.85,099 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ளது, ஆனால் ஹோண்டா ஆக்டிவா டெல்லியில், ரூ.79,760 (எக்ஸ்-ஷோரூம்) விற்பனை ஆகிறது. இவை இரண்டும் மாறுபட்ட தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும் இரண்டிற்கும் சம அளவில் வாடிக்கையாளர்களும் இருப்பார் என கணிக்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்களில் இவற்றின் ஆதிக்கத்தில் மாற்றங்கள் நிகழலாம் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!