OLA Electric Scooter S1 & S1 Pro விற்பனைக்கு தயார் – முன்பதிவு செய்வது எப்படி?

0
OLA Electric Scooter S1 & S1 Pro விற்பனைக்கு தயார் - முன்பதிவு செய்வது எப்படி?
OLA Electric Scooter S1 & S1 Pro விற்பனைக்கு தயார் - முன்பதிவு செய்வது எப்படி?
OLA Electric Scooter S1 & S1 Pro விற்பனைக்கு தயார் – முன்பதிவு செய்வது எப்படி?

ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை டோர் டெலிவரி சேவையாக மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில், இவற்றை பெற்றுக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஓலா ஸ்கூட்டர்

நீண்ட நாள் அறிவிப்புக்கு பிறகு செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று, ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான விற்பனையை துவங்குகிறது. அதன் கீழ் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் மின்சார ஸ்கூட்டர்களை பெற்றுக்கொள்ள முடியும்.

8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!

அந்த வகையில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான வண்ண விருப்பங்களை தேர்ந்தெடுத்து, S1 மற்றும் S1 Pro ஆகியவற்றை இறுதி செய்துள்ளபடி ஹோம் டெலிவரி மூலம் வாகனங்களை பெறுவார்கள். இதற்கு முன்னதாக ஓலா எலக்ட்ரிக் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ விற்பனை கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஓலா நிறுவனம் தனது இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களை சரி செய்வதற்காக விற்பனையை தாமதமாக துவங்க முடிவு செய்தது.

  • இப்போது ஓலா எலக்ட்ரிக் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஸ்கூட்டர்களை பெற்றுக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் கீழ் கண்ட வழிமுறைகளை பின்பற்றி முன்பதிவுகளை செய்யலாம்.
  • அதன் கீழ், முதலில் தொலைபேசி எண் மற்றும் OTP சரிபார்ப்பை பயன்படுத்தி ஓலா எலக்ட்ரிக் இணையதளத்தில் உள்நுழையவும்.
  • ஓலா எலக்ட்ரிக் எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகியவற்றில் தேவையானதை தேர்ந்தெடுக்கவும்.

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இன்று முதல் கலந்தாய்வு!

  • இப்போது 10 வண்ண வகைகளில் இருந்து ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.
  • இதற்கான கட்டணங்களை முடிக்கவும். இதில், வாடிக்கையாளர்கள் S1 மற்றும் S1 ப்ரோ ஸ்கூட்டர்களுக்கு முழுமையான அளவு பணத்தை செலுத்தலாம் அல்லது ஓலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ள படி கடன் பெற்றுக்கொள்ளலாம். ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோவின் EMIக்கள் முறையே மாதத்திற்கு ரூ.2,999 மற்றும் ரூ.3,199 லிருந்து தொடங்குகின்றன.
  • எந்த கடனும் வாங்காமல் பைக் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் S1க்கு ரூ.20,000 மற்றும் S1 ப்ரோவுக்கு ரூ.25,000 செலுத்த வேண்டும்.
  • இந்த முன்பதிவு முடிந்ததும் கொடுக்கப்படும் டெலிவரி தேதியில் வாடிக்கையாளர்களின் வீடு தேடி ஓலா மின்சார ஸ்கூட்டர் வந்துவிடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!