அடுத்த 2 ஆண்டுகளில் எலக்ட்ரிக் கார் அறிமுகம் – ஓலா நிறுவனத்தின் புதிய திட்டம்
ஓலா நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனத்தின் இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.
ஓலா நிறுவனம்:
அன்றாட வாழ்வில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக வாகனங்கள் மாறிவிட்டது. தற்பொழுது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயர்வால் பலரது கவனமும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி அன்று ஓலா நிறுவனம் தனது புதிய படைப்பான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுகத்தால் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்கள் இரு தரப்பும் திருப்தியாக உள்ளது.
எச்டிஎப்சி வங்கி மீதான தொழில்நுட்பத் தடை நீக்கம் – RBI அறிவிப்பு!
ஓலா ஸ்கூட்டரில் 100 -150 கிமீ வரை இதன் வேகம் இருக்கும் எனவும், லித்தியம் அயர்ன் பேட்டரி, கிளவுட் இணைப்பு அல்லாய் வீல்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கிறது. வாகனங்கள் எஸ்1 மற்றும் எஸ்1 புரோ என்ற 2 மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. base-spec S1 trim மாடல் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 99,999 ஆகவும், higher S1 Pro மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,29,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 8.5 கிலோவாட் மோட்டருடன், வெறும் 3.6 வினாடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்டும் அளவிற்கு உள்ளது.
TN Job “FB
Group” Join Now
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் ஆண்டு தோறும் 20 லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஓலாவின் இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் 2023 க்குள் ஓலாவின் மின்சார கார் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். திட்டம் தொடங்கி முடியும் தருவாயில், அதன் விவரங்களை பற்றி முழுமையாக வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். ஓலாவின் எலக்ட்ரிக் கார் நகர்ப்புற சூழலுக்காக உருவாக்கப்பட்டது என்று கூறினார்.