
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.1,16,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!
ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant-Civil Engineering பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19/12/2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ஆயில் இந்தியா லிமிடெட் |
பணியின் பெயர் | Consultant-Civil Engineering |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19/12/2022 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:
ஆலோசகர்-சிவில் இன்ஜினியரிங் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு என OIL/ONGC/பிற பொதுத்துறை நிறுவனங்கள்/அரசு நிறுவனங்களில் இருந்து, ஓய்வுபெற்ற அனுபவமிக்க பணியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
OIL வயது வரம்பு:
19/12/2022 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
கல்வி தகுதி:
AICTE/UGC ஆல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 04 வருட கால சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் B.E. அல்லது B. Tech முடித்திருக்க வேண்டும். புகழ்பெற்ற பொதுத்துறை நிறுவனம்/அரசு நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ரூ.1,10,000/- சம்பளத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Exams Daily Mobile App Download
Civil Engineering தேர்வு செயல் முறை:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
Consultant-Civil Engineering : ரூ.1,16,000/-
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை துணை ஆவணம்(கள்)/சான்றிதழ்(கள்) உடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 19/12/2022க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.