விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ இல் கலந்து கொள்ளும் 4 போட்டியாளர்கள் விபரம் – உறுதியான பட்டியல்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ் 5' இல் கலந்து கொள்ளும் 4 போட்டியாளர்கள் விபரம் - உறுதியான பட்டியல்!
விஜய் டிவி 'பிக் பாஸ் 5' இல் கலந்து கொள்ளும் 4 போட்டியாளர்கள் விபரம் - உறுதியான பட்டியல்!
விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ இல் கலந்து கொள்ளும் 4 போட்டியாளர்கள் விபரம் – உறுதியான பட்டியல்!
பலரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்த ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் 4 போட்டியாளர்கள் பற்றிய விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் பல வித எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாக இருக்கிறது, ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி. கடந்த 4 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியினை இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். நேற்றே ஆரம்ப நிகழ்ச்சி வெற்றிகரமாக ஷூட்டிங் செய்யப்பட்டு விட்டது. மொத்தமாக 18 போட்டியாளர்கள் இந்த முறை பங்குபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் இந்த முறை பல புது முகங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் இந்த முறை உறுதியாக கலந்து கொள்ள இருக்கும் நால்வர் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எழில் & அம்ரிதாவை சேர்த்து வைக்கும் பாக்கியா – புதிய திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!!

ஏற்கனவே, நடிகை சகிலாவின் மகள் மிளா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கடைசி நிமிடத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி விட்டது. இதனால் ரசிகர்கள் மிகவும் கவலையில் இருந்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, தற்போது கானா இசைப்பாடகி இசைவாணி இந்த முறையில் கலந்து கொள்ள இருக்கிறாராம். இவர் தான் முதல் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ராஜு ஜெயமோகன் உறுதியாக கலந்து கொள்ள இருக்கிறாராம்.

சிவகாமியிடம் மாட்டிக் கொள்ளும் அர்ச்சனா, கர்ப்பமாக இருப்பதால் மன்னிக்கும் குடும்பத்தினர் – ‘ராஜா ராணி 2’ அடுத்த எபிசோட்!

இவர்களுடன் ஜெர்மனியை சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதா கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் இந்த முறை யூடிப் விமர்சகர் அபிஷேக் பங்குகொள்ள இருக்கிறார்களாம். தற்போது வரை இந்த தகவல்கள் மட்டுமே இணையத்தில் கசிந்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு போட்டியாளர்கள் பற்றிய அனைத்து விவரம் தெரிந்து விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!