விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ இல் களமிறங்கும் போட்டியாளர்கள் – மாஸ்டர் பட நடிகர் என்ட்ரி!
விஜய் தொலைக்காட்சியில் அடுத்த வாரம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு சீசன் 5-ல் மாஸ்டர் படத்தில் நடித்த சிபி சந்திரன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க உள்ளதாக ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். அது மட்டுமில்லாமல் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சில வழிமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி அம்மா இறப்பில் புதிய ட்விஸ்ட் – பரிகார புகைப்படம் ரிலீஸ்!
மேலும் உறுதிபடுத்தப்பட்ட போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதுவரை திருநங்கைகள் நமீதா மாரிமுத்து, மிளா, சூசன், பிரியங்கா, ஜிபி முத்து, சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த முறை புதிய டாஸ்குகள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நேருக்கு நேர் சந்திக்கும் பாரதி & கண்ணம்மா, அடுத்து நடக்கும் ட்விஸ்ட் – வேணுவின் திட்டம் பலிக்குமா?
எப்போது அக்டோபர் 3 ஆம் தேதி வரும் என பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் 5து சீசனில் இந்த பிரபலம் வரப்போகிறார், அவர் வருகிறார் என செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் யார் நிஜத்தில் வருகிறார்கள் என்பது நிகழ்ச்சி ஆரம்பித்தாலே தெரியும். இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வாத்தி கமிங் பாடலில் நடனம் ஆடி பிரபலமான நடிகர் சிபி சந்திரன் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்ள போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.