‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி அம்மா இறப்பில் புதிய ட்விஸ்ட் – பரிகார புகைப்படம் ரிலீஸ்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் லட்சுமி அம்மா இறப்பில் புதிய ட்விஸ்ட் - பரிகார புகைப்படம் ரிலீஸ்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் லட்சுமி அம்மா இறப்பில் புதிய ட்விஸ்ட் - பரிகார புகைப்படம் ரிலீஸ்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் லட்சுமி அம்மா இறப்பில் புதிய ட்விஸ்ட் – பரிகார புகைப்படம் ரிலீஸ்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த வாரம் முதல் லட்சுமி அம்மா இறந்து விட்டதால் இறுதி சடங்குகள் நடத்தியது போல காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அந்த படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் பரிகாரம் ஒன்றை படக்குழுவினர் செய்துள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் டாப் 5 இடங்களில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கடந்த வாரம் லட்சுமி அம்மா கதாபாத்திரம் இறந்து விட்டதாக இறுதி சடங்கு காட்சிகள் அனைத்தும் நிஜத்தை போல எடுக்கப்பட்டது. நீர் மாலை எடுப்பது, குளிக்க வைப்பது, எண்ணெய் வைப்பது, பாடையில் ஏற்றுவது கொல்லி வைப்பது, அஸ்தி கரைப்பது முதல் அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டன. அந்த காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு நடிகை ஷீலாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. அது மட்டுமில்லாமல் கண்ணனாக நடித்த சரவண விக்ரமின் நடிப்பும் பாராட்டப்பட்டது.

நேருக்கு நேர் சந்திக்கும் பாரதி & கண்ணம்மா, அடுத்து நடக்கும் ட்விஸ்ட் – வேணுவின் திட்டம் பலிக்குமா?

இந்நிலையில், பொதுவாக சின்னத்திரையிலோ அல்லது வெள்ளித்திரையிலோ இறந்தது போன்ற காட்சியில் நடித்தால், நடித்து முடித்த பிறகு உடனடியாக சிரித்த முகத்துடன் அந்த காட்சிகளுக்கு எதிரில் இருக்க வேண்டுமாம். இதனை ஒரு பரிகாரம் போல திரை உலகினர் செய்து வருகின்றனர்., மேலும் பல காலமாக திரையுலகை சேர்ந்தவர்கள் இது போன்ற சில விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை ஷீலா பாடையில் படுப்பது போல் நடித்துள்ளார். இதுபோன்ற காட்சிகளில் நடித்தால் காட்சி முடிந்தவுடன் நடித்தவருக்கு பூசணிக்காய், எலுமிச்சம் பழத்தினாலும் மற்றும் தேங்காயாலும் கற்பூரம் கொளுத்தி திருஷ்டி சுற்றி முடித்த பிறகுதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுமாம்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

மேலும் இந்த அனைத்து பரிகாரங்களையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் படக்குழுவினர் சரியாக செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் நீண்ட தூரத்திற்கு நடிகை ஷீலாவை பாடையில் வைத்து தூக்கிச் செல்வது கடினமான காரியம் என்பதால், அவருக்கு பதிலாக டூப் ஆக ஒரு பொம்மையை தயார் செய்துள்ளனர். இந்த பொம்மையை காண்பித்து அதே சீரியலில் மீனவாக நடிக்கும் ஹேமா தனது யூடுப் பக்கத்தில் வெளியிட்டார். இவ்வாறு அக்கறையுடன் படக்குழுவினர் நடந்து கொண்டதால் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!