தமிழகத்தில் பிப்.15க்கு பின் மழலையர் பள்ளிகள் திறப்பு? முதல்வர் ஆலோசனை!

0
தமிழகத்தில் பிப்.15க்கு பின் மழலையர் பள்ளிகள் திறப்பு? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் பிப்.15க்கு பின் மழலையர் பள்ளிகள் திறப்பு? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் பிப்.15க்கு பின் மழலையர் பள்ளிகள் திறப்பு? முதல்வர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வேகமெடுத்ததை தொடர்ந்து கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 15 ஆம் தேதி உடன் முடிவடைவதை அடுத்து ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் குறித்து முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு அதை செலுத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. கொரோனாவால் பலர் தங்களது நெருங்கிய சொந்தங்களை இழந்து இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டு அலைகளில் இருந்து மீண்டு வந்த மக்களுக்கு கடந்த மாதம் மூன்றாம் அலையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டது.

பிப்ரவரி 20ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!

தினசரி பாதிப்பு 10 ஆயிரத்திற்கு மேல் பதிவானது அதனால் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரனா பாதிப்பு குறைந்து ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றனர். கொரோனாவால் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தளங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவிகித பார்வையளர்கள் அனுமதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பான் & ஆதார் கார்டு இணைப்பு!

இந்நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற பிப். 15 ஆம் தேதி உடன் முடிவடைய இருக்கிறது. அதனால் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் வருகிற பிப். 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதில் மழலையர் பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் முழு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here