SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பான் & ஆதார் கார்டு இணைப்பு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பான் & ஆதார் கார்டு இணைப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பான் & ஆதார் கார்டு இணைப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பான் & ஆதார் கார்டு இணைப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பான் என்னுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் பான் – ஆதார் இணைக்கும் வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

எஸ்பிஐ:

இந்தியாவில் ஆதார் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் பிற தனிப்பட்ட வேலை சார்ந்த தேவைகளுக்கும் ஆதார் அவசியமாகும். இந்த நிலையில் ஆதார் எண்ணை ரேஷன் கார்டு, மொபைல் எண், வங்கி கணக்கு ஆகியவற்றுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வருமான வரி சட்டத்தின் படி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியமாகும். இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

அதன்படி பான் எண் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது . குறிப்பிட்ட தேதிக்குள் பான் – ஆதார் இணைப்பை செய்யவில்லை என்றால் அந்தந்த வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. 2022 மார்ச் 31ம் தேதிக்குள் பான் என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் பான் – ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் ஏப்ரல் 1ம் தேதி முதல் எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டுகள் செயல்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • முதலில் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் ‘லிங்க் ஆதார்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஆதார் விவரங்களை பதிவிட வேண்டும்.
  • ஆதார் கார்டில் உங்கள் பிறந்த தேதி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால் (I have only year of birth in the Aadhaar card) என்பதை டிக் செய்யவும்.
  • கேப்ட்சா கோட்-ஐ உள்ளிட்டு, ஒடிபி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மொபைல் நம்பருக்கு வரும் OTP எண்ணை பதிவிட்ட பிறகு பான் கார்டு ஆதார் கார்டுடன் இணைக்கப்படும்.
  • எஸ்எம்எஸ் வழியாகவும் பான் கார்டு ஆதார் கார்டு இணைப்பை செய்யலாம்.
  • UIDPAN<ஆதார் எண்> பான் எண் ஆகியவற்றை டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பிறகு பான் உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்படும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!