ஆதார் கார்டில் எத்தனை முறை தகவல்களை அப்டேட் செய்ய முடியும்? முழு விபரம் இதோ!

0
ஆதார் கார்டில் எத்தனை முறை தகவல்களை அப்டேட் செய்ய முடியும்? முழு விபரம் இதோ!
ஆதார் கார்டில் எத்தனை முறை தகவல்களை அப்டேட் செய்ய முடியும்? முழு விபரம் இதோ!
ஆதார் கார்டில் எத்தனை முறை தகவல்களை அப்டேட் செய்ய முடியும்? முழு விபரம் இதோ!

ஆதார் அட்டை பெற பொதுமக்கள் தங்களின் விபரங்களை பதிவு செய்யும்போது பெரும்பாலும் பிழைகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் எழுத்துப்பிழைகள், தொலைபேசி எண்கள் போன்றவற்றில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்படுகிறது. இது பயனரின் எதிர்காலத்தில் மேலும் சிக்கல்களை உருவாக்குகிறது. இதனை ஆன்லைன் மூலம் எளிதாக சரிசெய்து கொள்ளலாம்.

ஆதார் கார்டு அப்டேட்:

இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மக்கள் தங்களது ஆதார் கார்டின் விவரங்களை ஆன்லைனில் எளிதாக மாற்றலாம் அல்லது அப்டேட் செய்யலாம். பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் மொழி தொடர்பான மாற்றங்களை செய்யலாம். ஆதார் கார்டில் உள்ள பிழைகள் எதிர்காலத்தில் மக்கள் வங்கிக் கணக்குகளைத் திறக்கும்போது அல்லது அடையாள சான்றாக ஆதார் தேவைப்படும் எந்தவொரு அரசு அல்லது தனியார் துறை சேவையையும் பெறும்போது மேலும் சிக்கல்களை உருவாக்குகிறது.

தமிழக பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் – பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!

ஆதார் பான் கார்டுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் வாழ்நாளில் இரண்டு முறை தங்கள் பெயர்களை மாற்ற முடியும். அவர்களின் பாலினத்தை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும். பிறந்த தேதியை (DOB) வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.

TN Job “FB  Group” Join Now

UIDAI வலைதள தகவல்களின் படி, பெயர் மாற்றத்தை பொறுத்தவரை, பயனர்கள் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாளச் சான்று (POI) ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும். முகவரி மாற்றம் இருந்தால், முகவரி ஆவணங்களின் சான்று (POA) வங்கி பாஸ் புக், ரேஷன் கார்டு போன்றவை. இருப்பினும், பாலினத்தைப் புதுப்பிக்கும்போது எந்த ஆவணங்களும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விபரங்களை ஆன்லைன் வாயிலாக எவ்வாறு மாற்றலாம் என்பதற்கான வழிமுறைகளை காணலாம்.

  • UIDAI வலைதளத்திற்கு செல்லவும் – https://uidai.gov.in/
  • அதில் எனது ஆதார் எனும் ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  • அங்கிருந்து, ஆன்லைனில் புதுப்பித்தல் புள்ளிவிவர தகவல்களைக் கிளிக் செய்ய வேண்டும்
  • பின்னர் புதிய பக்கத்தில் தோன்றும் Proceed to Update ஆதார் என்பதைக் கிளிக் செய்க.
  • அங்கு பயனர்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
  • Send OTP என்பதைக் கிளிக் செய்க. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். அதனை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.
  • அங்கு நீங்கள் மாற்றம் / அப்டேட் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களையும் சேர்த்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். பின்னர் உங்களது தகவல் மாற்றம் செய்யப்பட்டு விடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!