ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – NPS திட்டத்தின் குறைந்தபட்ச வரவு, வயது வரம்பு! முழு விபரங்கள் இதோ!

0
ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - NPS திட்டத்தின் குறைந்தபட்ச வரவு, வயது வரம்பு! முழு விபரங்கள் இதோ!
ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - NPS திட்டத்தின் குறைந்தபட்ச வரவு, வயது வரம்பு! முழு விபரங்கள் இதோ!
ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – NPS திட்டத்தின் குறைந்தபட்ச வரவு, வயது வரம்பு! முழு விபரங்கள் இதோ!

நாடு முழுவதும் 1 கோடி வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளது மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது, இந்த NPS சேமிப்பு திட்டம். அதற்கான காரணம் அதில் உள்ள சிறப்பம்சங்கள் தான்.

NPS சேமிப்பு திட்டம்:

நாடு முழுவதும் உள்ள அனைத்து அமைப்பு சாரா ஊழியர்கள் மற்றும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் அவர்களது முதுமை காலத்தில் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டது தான் இந்த NPS திட்டம். இந்த (NPS- National Pension Scheme) தேசிய ஓய்வூதிய திட்டம் கடந்த 2009 ம் ஆண்டு இந்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயது 70 ஆகும். இந்த திட்டத்தில் சேருபவர்கள் மாதந்தோறும் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை ரூ.1000, அதிகபட்ச தொகை ரூ.12000 ஆகும். அதனை தொடர்ந்து அரசின் பங்காக மாதந்தோறும் 1000 முதல் 12000 வரை செலுத்தப்படும்.

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் – தியேட்டர்களில் 100% அனுமதி?

இந்த திட்டத்தில் இரண்டு அடுக்கு முறைகள் உள்ளன. அவற்றில் முதல் அடுக்கில் சேர்ந்தால் வாடிக்கையாளர்கள் திட்டம் முடியும் முன்பு அந்த தொகையை பெற எந்த வழியும் இல்லை. இரண்டாவது அடுக்கு முறையில் வாடிக்கையாளர்கள் எப்போது அவர்களுக்கு தேவைப்படுகிறதோ அப்போது அந்த தொகையினை திரும்ப பெற முடியும். ஆனால் வட்டி விகிதம் குறைவாக வழங்கப்படும். இந்த சேமிப்பு திட்டம் துவங்கும் நபர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் வழங்கப்படும். குறைந்தபட்சமாக ரூ. 500 கொண்டு இந்த கணக்கை ஒருவர் துவங்கலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.1000 வரவு வைக்கலாம்.

தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகள் – மனுதாரர் கோரிக்கை!

இந்த திட்டம் தொடங்குபவர்களுக்கு நிரந்தர வங்கி கணக்கு தொடங்கப்படும் அதாவது, PRAN கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கை வைத்து இந்தியாவின் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பணத்தை செலுத்த முடியும். கட்டுப்பாட்டாளரால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளர்கள் பல்வேறு சொத்து வகுப்புகளில் முதலீடுகள் மூலம் சந்தாதாரர் நிதியை கவனமாக நிர்வகிக்கிறார்கள். மேலும் இந்த திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்பாட்டு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். அதனாலே இந்த திட்டம் அனைவராலும் தொடங்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here