NPCIL நிறுவனத்தில் 225 காலிப்பணியிடங்கள் – ரூ.56,100/- ஊதியம்..!

0
NPCIL நிறுவனத்தில் 225 காலிப்பணியிடங்கள் - ரூ.56,100/- ஊதியம்..!
NPCIL நிறுவனத்தில் 225 காலிப்பணியிடங்கள் - ரூ.56,100/- ஊதியம்..!
NPCIL நிறுவனத்தில் 225 காலிப்பணியிடங்கள் – ரூ.56,100/- ஊதியம்..!

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள Executive Trainees பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 225 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாளுக்குள் (28.04.2022) விண்ணப்பிக்கவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Nuclear Power Corporation of India Limited (NPCIL)
பணியின் பெயர் Executive Trainees
பணியிடங்கள் 225
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய அணுசக்தி கழகம் காலிப்பணியிடங்கள்:

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள Executive Trainees பணிக்கு என மொத்தமாக 225 பணியிடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Mechanical – 87
  • Chemical – 49
  • Electrical – 31
  • Electronics – 13
  • Instrumentation – 12
  • Civil – 33
ET கல்வி விவரம்:

Executive Trainees பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் B.E, B.Tech, B.Sc, M.Tech போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பதாரர் GATE தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

ET வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 28.04.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 26 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

ET ஊதியம் விவரம்:

Executive Trainees பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level 10 படி ரூ.56,100/- மாத ஊதியமாக தரப்படும்.

இந்திய அணுசக்தி கழகம் தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் GATE தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு 13.06.2022 நாள் முதல் 25.06.2022 நாள் வரை நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

இந்திய அணுசக்தி கழகம் விண்ணப்ப கட்டணம்:

UR / OBC / EWS விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ExamsDaily Mobile App Download

SC / ST / PwBD பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், DODPKIA மற்றும் NPCIL பணியாளர்கள் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இந்திய அணுசக்தி கழகம் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் தங்களது விண்ணப்பங்களை 28.04.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NPCIL Notification Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!