இனி இணையதளம் மூலம் பான் கார்டு பதிவிறக்கம் செய்யலாம் – எளிய வழிமுறைகள் அறிவிப்பு!

0
இனி இணையதளம் மூலம் பான் கார்டு பதிவிறக்கம் செய்யலாம் - எளிய வழிமுறைகள் அறிவிப்பு!
இனி இணையதளம் மூலம் பான் கார்டு பதிவிறக்கம் செய்யலாம் - எளிய வழிமுறைகள் அறிவிப்பு!
இனி இணையதளம் மூலம் பான் கார்டு பதிவிறக்கம் செய்யலாம் – எளிய வழிமுறைகள் அறிவிப்பு!

இந்தியாவில் பான் கார்டு ஒரு முக்கிய அரசு ஆவணமாக கருதப்படுகிறது. மேலும் இந்த பான் கார்டை செல்போன் மூலம் எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

பான் கார்டு:

இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு சில அடிப்படை ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் ஆதார் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதனை அடுத்து தற்போது பான் கார்டும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. குறிப்பாக அரசாங்க சலுகைகளை பெற அல்லது வங்கிகளில் நிதி பரிமாற்றம் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்கு பான் கார்டு கண்டிப்பாக தேவைப்படுகிறது. பான் கார்டு வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் வருமான வரி, பண மோசடிகளை கண்டறிய பயன்பட்டு வருகிறது.

தற்போது மக்கள் அனைவரும் அனைத்து செயல்பாடுகளையும் ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பான் கார்டை எளிமையாக ஸ்மார்ட்போன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதாவது PDF அல்லது XML வடிவத்தில் பான் கார்டை டவுன்லோடு செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தான் பான் கார்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதை தவிர ஸ்மார்ட்போனில் பான் கார்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

1. முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில்  onlineservices.nsdl.com என்ற அரசாங்க இணையதளதிற்கு செல்ல வேண்டும்.  பிறகு பான் எண் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

2. அடுத்து உங்கள் பான் எண்ணை பதிவிட வேண்டும். அதன் பிறகு ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.

தமிழகத்தின் பிரத்யேக மாப்பிளை சம்பா அரிசி – அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

3. அதை தொடர்ந்து நீங்கள் பிறந்த தேதி உள்ளிட்டு, பின்னர் கேப்சாவை நிரப்ப வேண்டும். இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்த பிறகு submit என்பதை கிளிக் செய்யவும்.

4. அதன்பிறகு ஒடிபி-ஐ பெற மின்னஞ்சல் அல்லது மொபைலில் ஒடிபி-ஐ உருவாக்குவதற்கான விருப்பத்தை தேர்வு செய்யவும்.

5. இப்போது உங்களுக்கு கிடைத்த ஒடிபி-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும் என்பதை கிளிக் செய்தால் போதும், இப்போது உங்களது e-PAN கார்டை PDF அல்லது XML வடிவத்தில் திரையில் பார்க்க முடியும். இப்போது எளிமையாக பான் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!