இனி பேருந்தில்  பயணிக்க டிக்கெட் எடுக்க வேண்டாம்? – ஆச்சர்ய தகவல்!

0
இனி பேருந்தில்  பயணிக்க டிக்கெட் எடுக்க வேண்டாம்? - ஆச்சர்ய தகவல்!

தமிழகத்தில் உள்ள மாநகர பேருந்துகளுக்கான டிக்கெட் எடுக்கும் வழிமுறைகளில் மாற்றங்கள் வரவுள்ளதாக தெரிய வருகிறது.

பேருந்து டிக்கெட்:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில்தான் அரசின் திட்டங்கள் அனைத்தும் முன்னதாக செயல்பாட்டுக்கு வருகிறது. அந்த வகையில் மெட்ரோ பேருந்து பயணம் மற்றும் எலக்ட்ரிக் ட்ரெயின் ஆகிய மூன்று பொது போக்குவரத்துகள் பெரும்பாலான மக்களின் பயண முறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு தானியங்கி பயண சீட்டு வழங்கும் முறையை கொண்டு வர உள்ளதாக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. மார்ச் மாதம் முதல் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சென்னையில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NALCO நிறுவனத்தில் மாதம் ரூ.140000/‐ சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – 277 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்..!

இதன் மூலமாக பயணிகள் செல்லும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக ஒரு கார்டு வடிவமைக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலமாகவே மெட்ரோ எலெக்ட்ரிக் ட்ரெயின் மற்றும் பேருந்து போன்ற அனைத்திற்கும் டிக்கெட் எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பயணத்தின் போது இந்த கார்டை டாப் செய்தால் மட்டும் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!