NALCO நிறுவனத்தில் மாதம் ரூ.140000/‐ சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு – 277 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்..!

0
NALCO நிறுவனத்தில் மாதம் ரூ.140000/‐ சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு - 277 காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்..!

நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Graduate Engineer Apprentice பதவிக்கு என்று 277 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் தொகுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் National Aluminum Company Limited (NALCO)
பணியின் பெயர் Graduate Engineer Apprentice
பணியிடங்கள் 277
விண்ணப்பிக்க கடைசி தேதி 02/04/2024
விண்ணப்பிக்கும் முறை Online

NALCO காலிப்பணியிடங்கள்:

Graduate Engineer Apprentice பதவிக்கு என மொத்தம் 277 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Mechanical  – 127 பணியிடங்கள்

Electrical  – 100 பணியிடங்கள்

Instrumentation  – 20 பணியிடங்கள்

Metallurgy – 10 பணியிடங்கள்

Chemical  – 13 பணியிடங்கள்

Chemistry – 7  பணியிடங்கள்

வயது விவரம்:

02/04/2024 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 30  வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டை அவசியம்? – தேர்தல் ஆணையம் தகவல்!

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 55% மதிப்பெண்களுடன்  Bachelor’s Degree in Engineering or Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NALCO  ஊதிய விவரம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்ட பதிவுதாரர்களுக்கு மாதம்  ரூ.40000 – 3% – 140000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

பதிவுதாரர்களின் தகுதி மற்றும் அனுபவங்கள் பொறுத்து  Shortlisted செய்யப்படுவார்கள், அதன்பின் தகுதியானவர்கள் நேர்காணல் வாயிலாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

NALCO   விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் http://www.nalcoindia.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 02/04/2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download NALCO Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!