நீங்க கால் டாக்சி புக் பண்ணுவீங்களா? இனி அதிக பணம் செலவிட நேரும்! கவலையில் வாடிக்கையாளர்கள்!

0
நீங்க கால் டாக்சி புக் பண்ணுவீங்களா? இனி அதிக பணம் செலவிட நேரும்! கவலையில் வாடிக்கையாளர்கள்!
நீங்க கால் டாக்சி புக் பண்ணுவீங்களா? இனி அதிக பணம் செலவிட நேரும்! கவலையில் வாடிக்கையாளர்கள்!
நீங்க கால் டாக்சி புக் பண்ணுவீங்களா? இனி அதிக பணம் செலவிட நேரும்! கவலையில் வாடிக்கையாளர்கள்!

தமிழகத்தில் தலைநகரான சென்னையில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனமான ஓலா (OLA) ஆட்டோ சேவைக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த விலை உயர்வால் மக்கள் வாடகை ஆட்டோ மற்றும் கார்களை புக் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

கட்டண உயர்வு:

தமிழகத்தில் தனியார் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் மக்களுக்கு எல்லா நேரங்களிலும் சிறப்பான சேவை அளித்து வருகிறது. பெரும்பாலும் மக்கள் போக்குவரத்த்தில் செல்லும் போது காலதாமத்தை சந்திக்கின்றனர். அதனால் திட்டமிட்டபடி சரியான நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்ல தனியார் ஆட்டோ மற்றும் கார் சேவைகளை பயன்படுத்துகின்றனர். இத்தகைய வாகனங்களில் நீங்கள் செல்லும் போது பயணிக்கும் கிலோ மீட்டருக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கக்கப்படுகிறது. மற்றொரு பலன் என்னவெனில் நீங்கள் புக் செய்தவுடன் உங்கள் இருப்பிடத்திற்கே வந்து விடுவார்கள்.

இதனால் பயணிப்பவர்களுக்கு அலைச்சலும், நேரமும் மிச்சமாகிறது. இது போன்ற பிரபல தனியார் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் ஒன்று தான் ஓலா. தமிழகத்தில் அதிக மக்கள் ஓலா ஆட்டோ, கார் சேவைகளை பயன்படுத்துகின்றனர். இந்த நேரத்தில் ஓலா நிறுவனம் சென்னையில் ஆட்டோ மற்றும் கார்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.110 உயர்த்தியுள்ளது. மக்கள் அதிகம் வசிக்க கூடிய தலைநகர் சென்னையில் சுமார் 1½ லட்சம் ஓலா ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் இயங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

பொதுமக்களே அலர்ட்.. தமிழகத்தில் நாளை (செப்.27) இந்த ஏரியாக்களில் பவர் கட்!

தற்போது பெட்ரோல், டீசல் விலையானது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது ஓலா நிறுவனம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. முதலில் 2.5 கி.மீ. தூரம் வரை குறைந்தபட்சமாக ரூ.55 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 110 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஓலா வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் தற்போது ஓலா கார், ஆட்டோக்களை புக் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!