தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை - அமைச்சர் அறிவிப்பு!
தமிழக கோவில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார்.

அமைச்சரின் அறிவிப்புகள்:

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து துறை வாரியான விவாதம் நடைபெற்று வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். திமுக தலையேற்ற நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. முதல் பணியாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களின் நிலங்கள் கண்டறியப்பட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அனைத்து சாதியினரும், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று புதிய அறிவிப்புகள் வெளியானது.

T20 World Cup : இந்திய அணிக்கு சவால் விட்ட பாகிஸ்தான் கேப்டன் – எகிறும் எதிர்பார்ப்பு!

மேலும் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது கோவில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது என பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். முக்கியமான கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்கனவே பக்தர்கள் புகார் அளித்து வருகின்றனர். இதனால் இனி கட்டணம் வசூலிக்க கூடாது. அதற்கான கட்டணத்தை திருக்கோயில் நிர்வாகமே வழக்கும் என்று கூறியுள்ளார்.

  • கோயில்களில் ஓதுபவர்களுக்கு பயிற்சி காலத்தில் 1000 ரூபாய் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.3000 ஆக அதிகரிக்கப்படும்.
  • பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை 1000 ரூபாய் வழங்கப்படும்.
  • பல்வேறு கோயில்களுக்கான சிறப்பு நிதி என்பதும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி கோவிலுக்கு ரூ.4 கோடியே 5 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சூரிய மின்சக்தியில் நிறைய கோயில்களுக்கு விளக்குகள் கொடுக்கப்படும் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்
  • மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் திருமணம் நடைபெற்றால் கட்டணம் கிடையாது.
  • இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!