தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது – அரசு அதிரடி அறிவிப்பு!

0
தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது - அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது - அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காது – அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அரசு ஜனவரி 10ம் தேதி வரை முடிவடைந்த கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

பேருந்துகள் இயங்காது:

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் இந்தியாவில் கொரோனா வைரஸின் 3ம் அலை தொடங்கியுள்ளது என்று அறியப்படுகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அத்துடன் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று முடிவடைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மதுரையில் நாளை (ஜன.12) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை அமல்படுத்தப்படும். அத்துடன் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பின்பற்றப்படும். மேலும் வருகிற 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட சேவைகள் செயல்படாது என்றும் அறிவித்துள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17ம் தேதிக்கு மாற்றம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதையடுத்து காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் உள்ளிட்ட கடைகள் செயல்படாது. மேலும் இரவு நேர ஊரடங்கு காலத்தில் உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வாடகை வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளிவர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here