பிப்ரவரி 14 முதல் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறப்பு – இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்!

0
பிப்ரவரி 14 முதல் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறப்பு - இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்!
பிப்ரவரி 14 முதல் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறப்பு - இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்!
பிப்ரவரி 14 முதல் பள்ளி, கல்லூரிகள் முழுவதுமாக திறப்பு – இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்!

சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் நேற்று (பிப்.10) முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிர்வாகம், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களையும் பிப்ரவரி 14 முதல் திறக்க அனுமதித்துள்ளது.

ஊரடங்கு நீக்கம்

கடந்த சில நாட்களாக கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதால், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம் நேற்று (பிப்.10) முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனுடன் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை பிப்ரவரி 14 முதல் திறக்க அரசு அனுமதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களின் கீழ், சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.

தமிழகத்தில் பிப்.19ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!

கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பிப்ரவரி 14 முதல் திறக்கப்படலாம். இதனுடன் சண்டிகர் பறவை பூங்கா மற்றும் ராக் கார்டன் பிப்ரவரி 12 முதல் மீண்டும் திறக்கப்படும். இந்த உத்தரவானது இன்று (பிப்.11) முதல் மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது சண்டிகரில் நேற்று (பிப்.10) ஒரு நாளில் 123 கொரோனா பாதிப்புகளுடன் ஒரு மரணம் மட்டும் பதிவாகியுள்ளது. இப்போது அரசால் அனுமதிக்கப்பட்ட சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.

அந்த வகையில், நள்ளிரவு 12:30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அத்தியாவசியமற்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனிநபர்களின் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன.

 • பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் பிப்ரவரி 14 முதல் முழு திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
 • இது தொடர்பான விரிவான உத்தரவு கல்விச்செயலாளர் மற்றும் சண்டிகர் நிர்வாகத்தால் வெளியிடப்படும்.
 • சண்டிகர் பறவை பூங்கா மற்றும் ராக் கார்டன் ஆகியவை பிப்ரவரி 12 முதல் திறக்க அனுமதிக்கப்படும்.
 • சந்தைகள், கடைகள், மண்டிகள், நிறுவனங்கள், மால்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், பார்கள், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள் மற்றும் சுகாதார மையங்கள் ஆகியவற்றில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
 • புதிய உத்தரவின்படி, எந்தவொரு நோக்கத்திற்காகவும் மக்கள் கூடுவதற்கு வீட்டிற்குள் 200 நபர்களுக்கும், வெளியில் 500 நபர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

  Velaivaippu Seithigal 2022

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here