தலைநகர் & 9 மாகாணங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு – தாய்லாந்து அரசு அறிவிப்பு!
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் மற்றும் அதன் அண்மையில் உள்ள 9 மாகாணங்களில் கொரோனா பாதிப்புகளின் நிலை தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை 7 மணி நேரத்திற்கு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உலகமெங்கிலும் உருவான கொரோனா பெருந்தொற்று பாதிப்பானது இன்று வரை குறையவில்லை. தொற்று நோயாக கருதப்படும் இந்த கொரோனா வைரஸ் 2 மற்றும் 3 ஆம் அலையாக உருமாறி பல நாடுகளில் மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா முதலாம் அலையால் அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், அதன் 2 ஆம் அலை தாக்கமானது இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
பாக்கியாவை வண்டி வாங்க சொல்லும் ராதிகா – கோபி சம்மதிப்பாரா? சூடுபிடிக்கும் ‘பாக்கியலட்சுமி’!
இதற்கிடையில் தாய்லாந்து நாட்டிலும் கொரோனா பாதிப்புகள் தற்போது தீவிரமடைந்து வருவதால் தலைநகர் பாங்காக் மற்றும் அதன் 9 மாகாணங்களில் 7 மணி நேரத்திற்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பாக்கள் மற்றும் அழகு நிலையங்களை மூடுவதாகவும், சில வணிகங்களுக்கான செயல்பாட்டு நேரங்களை குறைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு முறையை கருத்தில் கொண்ட தாய்லாந்து அரசு பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை கையில் எடுத்துள்ளது. அதன் படி கட்டுமான தொழிலாளர் வசிக்கும் முகாம்கள் மற்றும் இரவு நேர பொழுதுபோக்கு இடங்களில் பெரிய அளவு பாதிப்புகள் பதிவாகியுள்ளதால் இவ்வகையான ஊரடங்கு உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 72 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.