NHM தமிழ்நாடு நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தேசிய சுகாதார இயக்கம் தமிழ்நாடு (NHM TN) சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Audit Assistant, Tally Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன.
தேசிய சுகாதார இயக்கம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தேசிய சுகாதார இயக்கத்தில் (NHM TN) காலியாக உள்ள Software Programmer, Server Administrator, HRMIS Coordinator, IT Coordinator (LMIS), Tally Assistant, Accountant-AYUSH, Audit Assistant, Office Assistant போன்ற பணிகளுக்கு என மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE / B.Tech, M.Sc, IT, MCA, M.Tech, MBA, B.Com, B.Sc போன்ற Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.
- Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியை பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 01 வருடம் முதல் அதிகபட்சம் 05 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 02-05-2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.13,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய சுகாதார இயக்கம் தமிழ்நாடு விண்ணப்பிக்கும் வழிமுறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை 02.05.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.