WhatsApp குரூப் அட்மின்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய அப்டேட் அறிமுகம்!

0
WhatsApp குரூப் அட்மின்களுக்கு ஹாப்பி நியூஸ் - புதிய அப்டேட் அறிமுகம்!
WhatsApp குரூப் அட்மின்களுக்கு ஹாப்பி நியூஸ் - புதிய அப்டேட் அறிமுகம்!
WhatsApp குரூப் அட்மின்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய அப்டேட் அறிமுகம்!

வாட்ஸ்ஆஃப் குரூப்பில் பல வதந்திகள் பரவி கொண்டிருப்பதை தடுக்க Meta நிறுவனம் தற்போது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதிலும் குரூப் அட்மின்களுக்கு மட்டுமே இந்த சலுகை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp புதிய அப்டேட்:

உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களும் வாட்ஸ்ஆஃப் பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். ஒருவரின் வேலையை எளிமையாக்கவும், இருக்கும் இடத்தை ஒரே நொடியில் அடுத்த நபருக்கு ஷேர் செய்யவும், விரும்பிய நேரத்தில் எந்த நாட்டில் இருந்தாலும் கூட வீடியோ கால் மூலமாக பேசிக்கொள்ளும்படியாக பல வசதிகளை வாட்ஸ்ஆஃப் கொண்டுள்ளது. நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகள் அறிமுகமாகி கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் Meta நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் வாட்ஸ்ஆஃப்பில் தற்போது புதிய செயல்முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் – அசானி புயல் எதிரொலி!

அதாவது வாட்ஸ்ஆஃப்பில் ஒருவர் அனுப்பும் குறுந்செய்திக்கு ரியாக்ட் செய்யும்படியான வசதிகள் அறிமுகமாகியுள்ளது. தெளிவாக சொல்லவேண்டும என்றால் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது போன்ற ரியாக்ட் செய்யும் வசதி இருப்பது அனைத்து இன்ஸ்டா பயனாளர்களுக்கும் தெரிந்திருக்கும். அது போலவே வாட்ஸ்ஆஃப்பிலும் ரியாக்ட் செய்யும்படியான வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது. மேலும், வாட்ஸ்ஆஃப் குரூப்பிலும் ஒரு சில அப்டேட் கிடைத்துள்ளது.

Exams Daily Mobile App Download

எப்போதும் குரூப் அட்மின் மட்டுமே புதிதாக ஒரு நபரை குரூப்பில் சேர்க்க, நீக்க முடியும் போன்ற பல சலுகைகள் இருந்தது. ஆனால் தற்போது குரூப்பில் இருக்கும் ஏதேனும் ஒரு நபர் தவறான செய்தியை பரப்பினால் அந்த செய்தியை அட்மின் டெலிட் செய்துகொள்ளும் படியாக ஒரு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வாட்ஸ்ஆஃப் குரூப்பில் இருக்கும் ஒருவரின் குறுந்செய்தியை அட்மின் டெலிட் செய்துவிட்டால் This Was removed by an admin என்று காட்டப்படும். பெரும்பாலும் வதந்திகள் வாட்ஸ்ஆஃப் மூலமாக தான் அதிகம் பரவுகிறது. இதனை தடுக்கவே Meta நிறுவனம் இத்தகைய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!