ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? திரும்ப பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? திரும்ப பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? திரும்ப பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? திரும்ப பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணங்களுள் ஒன்று ஆதார் கார்டு ஆகும். தற்போது ஆதார் கார்டு ஒருவேளை தொலைந்துவிட்டால் கவலை வேண்டாம் இதனை சுலபமான முறையில் மீண்டும் திரும்ப பெறலாம். இதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு:

இந்தியாவில் தனி நபரின் அடையாள அட்டைகளில் முக்கிய ஆவணமாக கருதப்படுவது ஆதார் கார்டு ஆகும். இந்த ஆதார் கார்டு வைத்திருந்தால் தான் அரசின் நலத்திட்ட உதவிகளை சுலபமாக பெற முடியும். மேலும் இறப்புச் சான்றிதழ், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு முக்கிய அடையாள அட்டையாக விளங்குகிறது. மேலும் தற்போது வங்கி கணக்கு, பான் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆதார் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். அதனால் நீங்கள் ஆதார் கார்டை பாதுகாப்பானதாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

ஏனெனில் ஆதார் கார்டு மூலமாக வங்கிகளில் கடன் கூட வாங்க முடியும். ஒருவேளை ஆதார் கார்டு தொலைத்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ கவலை வேண்டாம். இதனை நீங்கள் சுலபமாக ஆன்லைன் மூலமாக திரும்ப பெறலாம். மேலும் புதிய ஆதார் கார்டு பெற நினைக்கும் நபர்கள் அமர்ந்த இடத்தில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக சுலபமாக விண்ணப்பிக்க முடியும். மேலும் தற்போது ஆதார் கார்டை டிஜிட்டல் முறையில் ஸ்மார்ட்போன்களில் வைத்துக்கொள்ளலாம். இதற்கான எளிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகளுக்கான 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றம் – வலுக்கும் கோரிக்கை!

Exams Daily Mobile App Download

இ-ஆதார் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:

1. இதற்கு முதலில்  uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்கு (UIDAI) செல்ல வேண்டும்.

2. இதன் முகப்பு பக்கத்தில் ’Get Aadhaar’ என்ற சேவையில் ’download Aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்பொது UID, EID அல்லது VID ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

4. இதையடுத்து ‘Send OTP’ என்பதை கிளிக் செய்த உடன் உங்களின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

5. இப்போது இந்த OTP எண்ணை உள்ளிட்டு ’verify and download’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

6. இறுதியாக உங்களின் இ-ஆதார் பதிவிறக்கம் செய்ய தொடங்கும். ஆனால் இந்த இ-ஆதார் ஆனது PDF வடிவில் தான் சேமிக்கப்படும்.

7. இதனை OPEN செய்ய, உங்களது பெயரின் முதல் நான்கு எழுத்துகளை கேப்பிட்டல் லெட்டரிலும், அதன்பின்பு உங்களது பிறந்த தேதியின் வருடத்தையும் உள்ளிட வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!