விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இயக்குனரின் படைப்பில் புதிய சீரியல் – ப்ரஜன் & சரண்யா துராடி ஜோடி!
சீரியல்கள் மூலம் மக்களின் விருப்பமான சேனலாக மாறி இருக்கும் விஜய் டிவியில் தற்போது தெரிந்த முகங்களுடன், வித்தியாசமான கதைக்களத்துடன் புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய சீரியல்
தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் சீரியல்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்காக இருந்து வரும் பட்சத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கப்படும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் மக்கள் தங்கள் ஆதரவை கொடுத்து வருகின்றனர். அப்படி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் தற்போது தெரிந்த முகங்களுடன் புதிய சீரியல் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், செம்பருத்தி நடிகையுடன் காதல் – அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி!
அதாவது ‘சின்னத்தம்பி’ சீரியல் பிரபலம் ப்ரஜன் மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் நடிகை சரண்யா துராடி நடிப்பில் புதிய சீரியல் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் நல்ல ஃபேன் பேஸ் இருப்பதால் புதிய சீரியலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என தெரிகிறது. இவர்களுடன் சீனியர் ஆர்டிஸ்ட்டாக நடிகை லதா மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து சமீபத்தில் விலக்கப்பட்ட நடிகை ஷீலா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
சன் டிவி “ரோஜா” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பூஜாவை அழைத்து வரும் அஸ்வின்!
குறிப்பாக விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ன் இயக்குனர் சிவா சேகர் இந்த சீரியலையும் என்பதால் இதுவும் குடும்ப கதைக்களத்துடன் இருக்கும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவியில் ‘முத்தழகு’ என்ற புதிய சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில், தற்போது வரை ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல்களில் முடிவுக்கு வரும் அந்த 2 சீரியல் எதுவென்கிற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழத்துவங்கியுள்ளது.