தமிழகத்தில் ஆவின் பால் விற்பனையில் புதிய திட்டம் – அரசு அறிவிப்பு!!

1
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனையில் புதிய திட்டம் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனையில் புதிய திட்டம் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் ஆவின் பால் விற்பனையில் புதிய திட்டம் – அரசு அறிவிப்பு!!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு விநியோகம் செய்பவர்கள் மூலம், ஆவின் பால் விநியோகம் தங்குதடையின்றி நடைபெற அரசு முடிவெடுத்துள்ளது.

ஆவின் பால் விற்பனை:

தமிழக அரசின் அறிவிப்பின் படி நேற்று (மே 16) முதல் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு வகையான பால் பாக்கெட்டுகளுக்கும் 3 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பொது முடக்கம் நடைமுறையில் உள்ளபடியால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உணவு விநியோகம் செய்பவர்கள் மூலமாக தடையின்றி ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயம் – இன்று முதல் அமல்!!

இது குறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் ஆவின் பால் விலை பாக்கெட்டுகளுக்கு 3 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. பால் அட்டை வழியாக ஆவின் பால் பெறுபவர்கள் ஏற்கனவே முன்பணத்தை செலுத்தியிருப்பார்கள். அதனால் பால் விலை குறைப்பு வித்தியாசம் அடுத்த மாத விற்பனையின் போது ஈடு செய்யப்படும். தமிழகத்தில் தற்போது பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, சென்னை மக்களுக்கு தடையின்றி பால் மற்றும் பிற பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி, சோமாட்டோ மற்றும் டன்சோ ஆகிய உணவு நிறுவனங்கள் மூலமாக பால் விநியோகம் செய்யப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் விநியோகம் குறித்த புகார்கள், ஆலோசனைகள் இருந்தால் அவற்றை தெரிவிக்க 044 – 2346 4575, 2346 4576, 2346 4578 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3300 ஆகிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. The govt can even think of refunding a small amount if the plastic satchels are returned back. This will help in plastic pollution control

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!