இனி பிரசாதம் வீடு தேடி வரும் – இந்து சமய அறநிலையத்துறையின் புதிய திட்டம்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்!

0
இனி பிரசாதம் வீடு தேடி வரும் - இந்து சமய அறநிலையத்துறையின் புதிய திட்டம்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்!
இனி பிரசாதம் வீடு தேடி வரும் - இந்து சமய அறநிலையத்துறையின் புதிய திட்டம்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்!
இனி பிரசாதம் வீடு தேடி வரும் – இந்து சமய அறநிலையத்துறையின் புதிய திட்டம்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்!

தமிழகம் முழுவதும் 49 கோவில்களில் இருந்து பிரசாதம் பக்தர்களின் வீடுகளுக்கே அனுப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் பிரசாதமும் தபால் மூலமாக அனுப்ப இந்து சமய அறநிலையத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கோவில் பிரசாதம்:

தமிழகத்தில் பொதுவாகவே கோடை விடுமுறை காலங்களில் பக்தர்கள் குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு நேரில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். சில நேரங்களில் சுவாமியை கோவில்களுக்கு நேரில் சென்று தரிசிக்க முடியாத நிலையில் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே கோவில் பிரசாதங்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது வரைக்கும் 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளுக்கே தபால் மூலமாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பி வைக்கிறது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் அறிவிப்பு!

இந்நிலையில், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவில் பிரசாதமும் பக்தர்களின் வீட்டுக்கே தபால் மூலமாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது கோவிலிலிருந்து தீர்த்தம், 50 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பத்வதர்ஷினி அம்பாள் படம், விபூதி, குங்குமம் ஆகிய பிரசாதம் பக்தர்களின் இல்லத்திற்கே தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பக்தர்கள் www.hrce.tn.gov.in என்கிற இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தபால் மூலமாக பிரசாதம் பெறுவதற்கு பக்தர்கள் 145 கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!