EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினியை இணைப்பது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - நாமினியை இணைப்பது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - நாமினியை இணைப்பது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினியை இணைப்பது எப்படி?

EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் பிஎஃப் கணக்குடன் நாமினியை கட்டாயமாக இணைக்க வேண்டும். தற்போது எப்படி பிஎஃப் கணக்குடன் நாமினியை இணைப்பது என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO கணக்கு:

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமைப்பான ஊழியரின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சந்தாதாரர்களின் வேட்புமனுவை தாக்கல் செய்யும்படி வலியுறுத்தி வருகிறது. அதாவது, EPFO அமைப்பு நாடு முழுவதும் உள்ள வருங்கால வைப்பு நிதிகளை ஒழுங்குபடுத்துதல், நிர்வகித்தல் முதலான பணிகளை செய்கிறது. மேலும், ஊழியரின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக பயனடைந்து வரும் ஊழியர்களுக்கு EPFO யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியது.

Exams Daily Mobile App Download

இது மட்டுமல்லாமல் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயமாக தங்களது EPFO கணக்குடன் நாமினிகளை இணைக்க வேண்டும். அப்படி EPFO கணக்குடன் நாமினிகளை இணைக்கவில்லையெனில் பிஎஃப் பலன்களை பெற முடியாது. அதாவது, இ – நாமினேஷன் செயல்முறையின்படி ஒரு ஊழியர் எந்த உறுப்பினரையும் நாமினி ஆக்க முடியும். அப்படி, நாமினிகளை இணைக்காதபட்சத்தில் எதிர்காலத்தில் பணியாளர் இறக்க நேரிட்டால் அந்த பிஎஃப் பணத்தை எடுப்பதை சிக்கல் ஏற்பட்டுவிடும். இதனால் கட்டாயமாக EPFO கணக்குடன் நாமினிகளை இணைக்க வேண்டும்.

சீருடையுடன் பொது இடங்களுக்கு செல்ல மாணவர்களுக்கு தடை – அதிரடி உத்தரவு

தற்போது எப்படி EPFO கணக்குடன் நாமினிகளை இணைப்பது என்பதை பார்க்கலாம். முதலில், EPFன் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று உலகளாவிய கணக்கு எண் (UAN) மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். பின்னர், சேவை என்கிற பகுதிக்கு கீழ் உள்ள ‘பணியாளர்களுக்கான’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து, நிர்வகி என்பதற்கு கீழ் உள்ள ‘இ-நாமினேஷன்’ என்பதை கிளிக் செய்து சரியான தற்போதைய முகவரியை பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர், குடும்ப அறிவிப்பை மாற்ற ‘ஆம்’ என்பதைத் தேர்ந்தெடுத்து நாமினியின் விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்து ‘சேமி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து, தொடரவும் என்பதை கிளிக் செய்து ஆதார் எண் மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP எண்ணையும் பதிவு செய்துவிட்டால் EPFO கணக்குடன் நாமினிகளை இணைத்துவிடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!