கிரெடிட் கார்டு பெற எப்படி விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் தேவை? – முழு விவரம் இதோ!

0
கிரெடிட் கார்டு பெற எப்படி விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் தேவை? - முழு விவரம் இதோ!

மக்கள் பலர் கிரெடிட் கார்டு அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். உங்களுக்கு கிரெடிட் கார்டு வேண்டும் என்றால் பஞ்சாப் நேஷனல் வங்கி கார்டு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

கிரெடிட் கார்டு

வாங்கும் சம்பளம் பத்தவில்லை என்பதால் பலர் கிரெடிட் கார்டு பயன்படுத்துகின்றனர். உங்களுக்கு கிரெடிட் கார்டு வேண்டும் என்றால் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிரெடிட் கார்டு உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் கிரெடிட் கார்டுகளை வழங்குகிறது. இந்த கிரெடிட் கார்டு போர்ட்டலுக்கு செல்ல வேண்டும் அதில் RuPay Millennial, Rakshak RuPay Select, RuPay Select, RuPay Platinum, Visa Platinum ஆகிய ஆப்சன்களில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்யலாம்.

CSIR NCL நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு வேலை – ரூ.8,050/- ஊக்கத்தொகை!

அதில் உங்களுடைய வசதியை தேர்வு செய்து, ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். RuPay Millennial கார்டு என்பது ரூ. 399 மற்றும் வருடாந்திரக் கட்டணமாக ரூ. 999 (ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் செலவில் இலவசம்) கொண்ட சிறப்பு கார்டாகும். ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டண பில், தொலைபேசிக் கட்டண பில், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை முகவரி சான்றாக பயன்படுத்தலாம். அடையாளச் சான்றாக பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும். சம்பள ரசீது, படிவம் 16, ஐடிஆர் போன்ற ஆவணங்களும் தேவைப்படும். இதை கொடுத்து உங்களுக்கான கிரெடிட் கார்டை வாங்கலாம்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!