தமிழகத்தில் 99% பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு – அமைச்சர் எச்சரிக்கை தகவல்!

0
தமிழகத்தில் 99% பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு - அமைச்சர் எச்சரிக்கை தகவல்!
தமிழகத்தில் 99% பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு - அமைச்சர் எச்சரிக்கை தகவல்!
தமிழகத்தில் 99% பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிப்பு – அமைச்சர் எச்சரிக்கை தகவல்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகம் பரவுகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,55,474 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை தகவல்:

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக,மராட்டியம்,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். மேலும் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது.

திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – 4 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை!

இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கல்லூரிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுவருகிறது. ஐஐடி, அண்ணாபல்கலைக்கழகத்தை தொடர்ந்து தற்போது சென்னை விஐடி கல்லூரியில் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியர்களை சந்தித்து பேசினார், அப்போது கேளம்பாக்கத்தில் விஐடி கல்வி நிறுவனத்தில் 163 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வடமாநிலத்தில் இருந்து வந்த மாணவர்களால் தொற்று பரவியது கண்டறிப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் கல்வி நிறுவன வளாகத்தை நேரில் ஆய்வு செய்தோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என தெரிவித்துள்ளார். இங்கு கொரோனா பாதித்தவர்களில் 99% பேரை ஓமிக்ரான் பிஏ2 வகை தான் தாக்கியுள்ளது. இந்த தொற்றின் பரவல் வேகம் சற்று அதிகமாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்று கூறியுள்ளார். எனவே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!