டிச.25 முதல் சாலைகளில் 10 பேருக்கு மேல் செல்வதற்கு தடை – புதிய கட்டுப்பாடுகள் அமல்! அரசு நடவடிக்கை!

0
டிச.25 முதல் சாலைகளில் 10 பேருக்கு மேல் செல்வதற்கு தடை - புதிய கட்டுப்பாடுகள் அமல்! அரசு நடவடிக்கை!
டிச.25 முதல் சாலைகளில் 10 பேருக்கு மேல் செல்வதற்கு தடை - புதிய கட்டுப்பாடுகள் அமல்! அரசு நடவடிக்கை!
டிச.25 முதல் சாலைகளில் 10 பேருக்கு மேல் செல்வதற்கு தடை – புதிய கட்டுப்பாடுகள் அமல்! அரசு நடவடிக்கை!

வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக போர்ச்சுக்கல் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

புதிய கட்டுப்பாடுகள்

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவிக்கொண்டிருக்க கூடிய ஒமிக்ரான் வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான புதிய நடவடிக்கைகளை போர்ச்சுக்கல் நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான முடிவு, இன்று (டிச.22) நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர், அன்டோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார். அதன் படி, ‘கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் ஏராளமான மக்கள் ஒரு குழுவாக சேருவதை தடுக்க முயற்சிக்குமாறு நான் குடும்பங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – பதவி மற்றும் தேர்வு குறித்த விபரங்கள்!

இது சாதாரண கிறிஸ்துமஸ் அல்ல. அதனால் தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முடிந்தவரை தங்கள் குடும்பத்தில் வைத்திருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அரசு விதித்துள்ள சில கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை காணலாம். அந்த வகையில் முதலாவதாக புத்தாண்டு தினத்தன்று பொது சாலைகளில் 10 பேருக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இலவச கொரோனா ஸ்கிரீனிங் சோதனைகளின் எண்ணிக்கை ஒரு நபருக்கு ஒவ்வொரு மாதமும் நான்கு முதல் ஆறு முறையாக அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 1,040 மருந்தகங்கள் தொழில்முறை பயன்பாட்டிற்கான இலவச சோதனைகளை மேற்கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 454 ஆய்வகங்களும் இந்த திட்டத்தை கடைபிடிக்கின்றன.

தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் அரசாங்கம் வரையறுத்திருந்த நடன இடங்களை கொண்ட டிஸ்கோக்கள் மற்றும் பார்கள் அனைத்தும் இப்போது டிசம்பர் 25 முதல் மூடப்படும். மேலும் டிசம்பர் 25 முதல் அலுவலக பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கான அணுகல் டிசம்பர் 25 முதல், கொரோனா வைரஸிற்கான எதிர்மறை சோதனையின் விளக்கத்தை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை? ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!

இப்போது பொது இடங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க வணிக இடங்களின் திறனை பொறுத்து ஒவ்வொரு ஐந்து சதுர மீட்டருக்கும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது உணவகங்கள், சூதாட்ட விடுதிகளில் கலந்து கொள்ள எதிர்மறை சோதனை தேவைப்படும். அதே போல ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள், திருமணங்கள் போன்ற குடும்ப விழாக்களுக்கும் இப்போது எதிர்மறை பரிசோதனை அவசியமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொது சாலைகளில் 10 பேருக்கு மேல் கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!