அக்.1 முதல் வங்கிகளில் வரப்போகும் மாற்றங்கள் – அமலுக்கு வரும் ஆட்டோ டெபிட்! முழு விபரம் இதோ!

0
அக்.1 முதல் வங்கிகளில் வரப்போகும் மாற்றங்கள் - அமலுக்கு வரும் ஆட்டோ டெபிட்! முழு விபரம் இதோ!
அக்.1 முதல் வங்கிகளில் வரப்போகும் மாற்றங்கள் - அமலுக்கு வரும் ஆட்டோ டெபிட்! முழு விபரம் இதோ!
அக்.1 முதல் வங்கிகளில் வரப்போகும் மாற்றங்கள் – அமலுக்கு வரும் ஆட்டோ டெபிட்! முழு விபரம் இதோ!

பொதுவாக அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வரும் தானியங்கி பண பரிமாற்ற வசதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சில விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிகள் நாளை (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருகிறது.

ஆட்டோ டெபிட் விதிகள்

இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் துறை வங்கிகளிலும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் சில மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. அதாவது தொலைபேசி ரீசார்ஜ், DTH, OTT மற்றும் பயன்பாட்டு பில்கள் போன்ற தானியங்கி தொடர்புடைய கட்டணங்கள் நிறுத்தப்பட இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI),செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு கூடுதல் அங்கீகார காரணியை (AFA) கட்டாயமாக்கியதால் இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. அந்த வகையில் ஆட்டோ-டெபிட் விதிகளில் நாளை (அக்டோபர் 1) முதல் பெரிய மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய உத்தரவு!

குறிப்பாக, மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்கு RBI விதிகள் பொருந்தும். எனவே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), மற்றும் வாலட் உள்ளிட்ட ப்ரீபெய்ட் பேமெண்ட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (PPI) ஆகியவற்றை உள்ளடக்கிய எந்தவொரு ஆட்டோ-டெபிட் பேமெண்ட் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாவிட்டால் பரிவர்த்தனை அனுமதிக்கப்படாது.

இது தொடர்பாக ஆகஸ்ட் 21ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கான அட்டைகளில் மின்-ஆணை செயலாக்கம் பற்றிய விவரங்களை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது. அந்த வகையில் கார்டு பரிமாற்றம், கூடுதல் அங்கீகாரக் காரணி (AFA), குறிப்பாக கார்டு இல்லா பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி (RBI) பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் வணிகர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் தொடர்ச்சியான பரிவர்த்தனைகள் AFA வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் RBI தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்த சேவைகளை மேற்கொள்வதற்காக இந்த ஆண்டு மார்ச் 31 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த சேவைகள் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது ஆட்டோ-டெபிட் விதிகள் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள சில முக்கியமான விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ன. அதன் படி,

ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய விதிமுறைகளின்படி வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக செலுத்த வேண்டிய பணம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். சுருங்க கூறின், வாடிக்கையாளரின் அங்கீகாரத்தை தொடர்ந்து பரிவர்த்தனை இனி தானாகவே செயல்படாது. இது சம்பந்தமாக, ரிசர்வ் வங்கி காண்டாக்ட்லெஸ் கார்டு பரிவர்த்தனைகளுக்கான வரம்பை அதிகரிக்கிறது. மற்றும் கார்டுகள், UPI அல்லது ஆட்டோ பரிவர்த்தனைகளுக்கான மின் ஆணைகளை ரூ.2,000 லிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அக்டோபர் 1 முதல், 5,000 ரூபாய்க்கு மேல் திரும்பத் திரும்பப் பணம் செலுத்துவதற்கு, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) அனுப்ப வேண்டும். இதனால் டிஜிட்டல் பரிமாற்றங்களை பாதுகாப்பாக செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here