ஜன.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் என்னென்ன? – முழு பட்டியல் இதோ!

0
ஜன.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் என்னென்ன? - முழு பட்டியல் இதோ!
ஜன.1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள் என்னென்ன? – முழு பட்டியல் இதோ!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிதாக பல்வேறு மாற்றங்களும் அமலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் வரும் ஜனவரி 1 முதல் அமலாக உள்ள மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

புதிய மாற்றங்கள்:

ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில் பல்வேறு புரிய மாற்றங்களும் நாட்டில் அமலாக உள்ளது. இவை அனைத்தும் மக்களின் அன்றாட வாழ்விற்கு முக்கிய அம்சங்களாக உள்ளதால் இவற்றை குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசிய நிலையாக இருந்து வருகிறது. தற்போது ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக உள்ள புதிய மாற்றங்கள் குறித்து இப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். தற்போது வரை சிலிண்டரின் விலையில் போதிய மாற்றங்கள் இல்லாத நிலையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மக்களை கவரும் வகையில் அரசு இதற்கான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வருமான வரி கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்கள் கணக்குகளுக்கான நாமினிகளை விரைவாக இணைக்க வேண்டும். வங்கிகளில் லாக்கர் கணக்கு வைத்துள்ளவர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் வாங்கி லாக்கர் கணக்கு மூடப்படும். இதேபோல் ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் UPI ID ஜனவரி 1ஆம் தேதி முதல் மூடப்படும் என்றும் இவற்றை உடனே ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய சிம் கார்டுகளை வாங்குவதற்கான விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேஒய்சி இணைப்புகளை பெற்ற பின்னரே இனி புதிய சிம் கார்டுகள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!