‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவிற்கு பதில் வேறு நடிகையா? சீரியலில் இருந்து விலகலா? உண்மை நிலவரம்!

0
'பாரதி கண்ணம்மா' வில்லி பரினாவிற்கு பதில் வேறு நடிகையா? சீரியலில் இருந்து விலகலா? உண்மை நிலவரம்!
'பாரதி கண்ணம்மா' வில்லி பரினாவிற்கு பதில் வேறு நடிகையா? சீரியலில் இருந்து விலகலா? உண்மை நிலவரம்!
‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவிற்கு பதில் வேறு நடிகையா? சீரியலில் இருந்து விலகலா? உண்மை நிலவரம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை பரினா விலக இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அவருக்கு பதில் வெண்பா கதாப்பாத்திரத்தில் ஏற்பட போகும் மாற்றங்கள் குறித்த புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகை பரினா

விறுவிறுப்பான கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கடந்த சில எபிசோடுகளாக எதிர்பாராத பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் இதுவரை வெண்பா செய்து வந்த டார்ச்சர்களை எல்லாம் தாங்கி கொண்டு வந்த கண்ணம்மா தற்போது தான் திருப்பி அடிக்க துவங்கியுள்ளார். அதுவும் ஒரே அடியாக வெண்பாவை ஜெயிலுக்குள் தள்ளி விட்டிருக்கிறார் கண்ணம்மா. இந்த காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களின் கவனம் ஈர்த்திருந்தது.

பிக்பாஸ் வீட்டை விட்டு நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான உண்மை காரணம் – அவரே வெளியிட்ட தகவல்!

இப்போது இதோடு நில்லாமல் வெண்பாவின் கண்ணீரால் மயங்கும் பாரதி, கண்ணம்மாவை பழிவாங்கும் நினைப்போடு அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறார். இதனால் அதிர்ச்சியடையும் கண்ணம்மா என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்து நிற்கிறார். இப்படி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் காட்சிகள் நகர்ந்து வர, இடையில் வெண்பாவாக நடித்து வரும் நடிகை பரினா இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த தகவல் குறித்து சம்பந்தப்பட்ட சீரியல் வட்டாரங்கள் கூறும் போது, பரினா ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலக இருப்பதாக சொல்லப்படும் தகவல் தவறானது என விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது நடிகை பரினாவுக்கு நவம்பர் மாதத்தில் தான் பிரசவம் ஏற்பட இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது வெண்பா ஜெயிலில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் அகில்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

இப்போது வெண்பா ஜெயிலில் இருக்கும் காட்சிகளுடன் நடிகை பரினா தனது பிரசவத்துக்காக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகுவார் என்றும் குழந்தை பிறந்த பின்னர் அவர் மீண்டுமாக வெண்பாவாக வருவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் வெண்பா கதாப்பாத்திரம் தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடித்தளம் என்பதால் அதற்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் பரினா இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட மாட்டார் எனும் தகவல் உறுதியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here