“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் அகில்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் அகில்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் அகில்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் மக்களின் நல்ல ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முன்னதாக அகில் கதாபாத்திரத்தில் அகிலன் நடித்து வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தது போல புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் பிரபலமாக இருக்கின்றன. மேலும் சீரியலில் கதைக்கு அனைவரும் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இந்த சீரியலில் ஹீரோ பாரதியின் தம்பியாக 3 ஆண்டுகளாக அகில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அகிலன். இவர் தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்தார். அதன் பின் இறைவி, பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் – ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் இருந்து விலகல்!

இந்நிலையில் சீரியலில் அவரது நடிப்பு திறமையை பார்த்து பல சினிமா வாய்ப்புகள் வந்தது. அதனால் அவரால் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க முடியவில்லை. அவர் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது அவரது கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடித்து வருகிறார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் அகில், அஞ்சலி ஜோடிக்கு நல்ல மவுசு இருந்தது. இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஜீ தமிழ் TRP ரேட்டிங்கில் சாதனை படைத்த ‘சத்யா 2’ சீரியல் – குவியும் வாழ்த்துக்கள்!

சீரியலில் இருந்து விலகினாலும் சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களுடன் அவர் நல்ல நட்பை வளர்த்து வருகிறார். அது வெண்பாவாக நடிக்கும் பரீனாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தெரிந்தது. இந்நிலையில் நேற்று பரீனாவின் பிறந்தநாளை முன்னிட்டு அகில் அவருக்கு இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து புகைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரீஎன்ட்ரியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!