“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதிய நடிகை அறிமுகம் – இனி இவருக்கு பதில் இவர்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் புதிய நடிகை அறிமுகம் - இனி இவருக்கு பதில் இவர்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதிய நடிகை அறிமுகம் – இனி இவருக்கு பதில் இவர்!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்கனவே ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா மாற்றப்பட்டு, தற்போது புதிதாக நடிகை சாய் காயத்ரி இன்று முதல் நடிக்க உள்ளதாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் பிரபல சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸில், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை விஜே தீபிகா தற்போது விலகி இருப்பதால் அந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகை இன்று முதல் அறிமுகமாகி உள்ளார். அவர் ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமான சாய் காயத்ரி புவனேஷ் ஆவார். அவரது சொந்த ஊர் மதுரை ஆகும். சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். காலெஜ் படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார்.

விஜய் டிவி “பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் களமிறங்கும் போட்டியாளர்கள் – வெளியான பட்டியல்!

தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார். 2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார். இந்த தொடரில் தனது சொந்த குரலில் பேசியுள்ளார். ஜெயா டிவியில் கில்லாடி ராணி என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார். பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்தார் சாய் காயத்ரி. அதிலும் இரண்டாவது லீட் ரோலில் நடித்தார். சரவணன் மீனாட்சி சீரியலிலும் நடித்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் நடிகை தீபிகாவின் கடைசி பதிவு – ரசிகர்கள் வருத்தம்!

இந்நிலையில் அவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபலமான ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதை பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் இன்று முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பழைய ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை விஜே தீபிகா மாற்றப்பட்டதற்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை அதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!