விஜய் டிவி “பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் களமிறங்கும் போட்டியாளர்கள் – வெளியான பட்டியல்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பிக்பாஸ்" சீசன் 5 நிகழ்ச்சியில் களமிறங்கும் போட்டியாளர்கள் - வெளியான பட்டியல்!
விஜய் டிவி “பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் களமிறங்கும் போட்டியாளர்கள் – வெளியான பட்டியல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து உள்ள நிலையில் 5-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் உறுதியாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி:

தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஏற்கனவே 4 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 5வது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான ப்ரோமோ மற்றும் டீசர் வெளியாகியது. அதனால் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் நடிகை தீபிகாவின் கடைசி பதிவு – ரசிகர்கள் வருத்தம்!

தற்போது 5 வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாகவும், இதற்கான போட்டியாளர்கள் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள போட்டியாளர்கள் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் சில உறுதியான வட்டங்கள் இவர்கள் எல்லாரும் கலந்து கொள்ள உள்ளார்கள் என தகவல் தெரிவித்துள்ளது.

சமந்தா, நாக சைதன்யா இடையே தொடரும் விவாகரத்து குழப்பம் – ட்விட்டர் பதிவு!

அதில் மிலா, நமீதா மாரிமுத்து, மாடல் வனஸ்ஸா, மிஸ்டர் இந்தியா கோபிநாத், பவானி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, ஜி.பி முத்து, பிரியா ராமன் ஆகியோர் கட்டாயம் கலந்து கொள்ள உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதிக்கு பின்னர் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் உறுதியான பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!