‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் நடிகை தீபிகாவின் கடைசி பதிவு – ரசிகர்கள் வருத்தம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' படப்பிடிப்பில் நடிகை தீபிகாவின் கடைசி பதிவு - ரசிகர்கள் வருத்தம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' படப்பிடிப்பில் நடிகை தீபிகாவின் கடைசி பதிவு - ரசிகர்கள் வருத்தம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பில் நடிகை தீபிகாவின் கடைசி பதிவு – ரசிகர்கள் வருத்தம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா சீரியலை விட்டு விலகியுள்ள நிலையில், படப்பிடிப்பு தளத்தில் தான் கடைசியாக எடுத்துக் கொண்ட ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

விஜே தீபிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் மிக முக்கியமான சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. ஒரு அண்ணன், 3 தம்பிகள் என கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் அவ்வப்போது எழும் சிக்கல்களை சமாளித்து ஒன்றாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இக்கதைக்கு மக்கள் கொடுத்து வரும் ஆதரவு அநேகம். இந்த தொடரில் இதுவரை ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில், பாண்டியன் ஸ்டோர்ஸின் கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக விஜே தீபிகா நடித்து வந்தார்.

சமந்தா, நாக சைதன்யா இடையே தொடரும் விவாகரத்து குழப்பம் – ட்விட்டர் பதிவு!

தற்போது இந்த தொடரில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் எல்லாம் இவரை சுற்றியே நகர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக இத்தொடரில் நடித்து வரும் தீபிகாவுக்கு ரசிகர்கள் தங்களது ஏக ஆதரவை கொடுத்து வந்தனர். அதற்கு ஏற்றாற்போல மற்ற சீரியல் நடிகர், நடிகைகளுடன் இணைந்து தீபிகாவும் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் விஜே தீபிகா திடீரென ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரை விட்டு விலகியுள்ளார்.

இதன் உண்மையான காரணம் எதுவும் வெளிவராத நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தளத்தில் அவர் எடுத்துக்கொண்ட கடைசி பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘இதுவும் கடந்து போகும்’ மற்றும் ‘குட்டி ஸ்டோரி’ பாடலுடன் சீரியலில் ஒளிபரப்பான சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டு ஒரு முழு வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீடியோவின் கடைசி காட்சிகளில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு அவரே ரீல்ஸ் செய்திருப்பது போல இருந்தது.

செண்பகம் தான் ரோஜாவின் அம்மா, உண்மை தெரிய போகும் நேரம் – “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

தொடர்ந்து, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா கதாபாத்திரத்துக்கு மக்கள் இதுவரை கொடுத்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர், விஜே தீபிகாவாக என்றும் ரசிகர்களுடன் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவானது அவரது ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் ‘ஈரமான ரோஜாவே’ புகழ் சாய் காயத்ரி நடித்து வருகிறார். இதனுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வருபவரும் சீரியலை விட்டு விலகியுள்ளார். இந்த மாற்றம் ரசிகர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!