விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அறிமுகம் ஆகும் நடிகர் ரவிவர்மன்? வெளியான தகவல்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அறிமுகம் ஆகும் நடிகர் ரவிவர்மன்? வெளியான தகவல்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அறிமுகம் ஆகும் நடிகர் ரவிவர்மன்? வெளியான தகவல்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அறிமுகம் ஆகும் நடிகர் ரவிவர்மன்? வெளியான தகவல்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களத்தில் புதிதாக ஒருவர் என்ட்ரி கொடுப்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில், அந்த நபர் யார் என்கிற விவரங்கள் தற்சமயம் பெறப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சமீப காலமாக விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் ரசிகர்களுக்கு சற்று போரடிக்க துவங்கி இருக்கிறது. குறிப்பாக கண்ணன், ஐஸ்வர்யாவின் ரீயூனியனுக்கு பிறகு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையானது வழக்கம் போல எந்தவொரு ஸ்வாரசியமும் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. என்றாலும் அவ்வப்போது முல்லையின் குழந்தை தொடர்பான குழப்பங்கள், மீனா, ஐஸ்வர்யாவின் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது காட்டப்பட்டு வந்தாலும் அந்த கதையும் பெரிதாவது போல தெரியவில்லை.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷூட்டிங்கில் நாங்கள் இப்படி தான்? வைரலாகும் கண்ணன், ஐஸ்வர்யா வீடியோ!

இதற்கிடையில் பாண்டியனுக்கு பெயர் சூட்டு விழா, கயலுக்கு பிறந்தநாள் விழா, மொட்டை போடுவது என ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் குழந்தைகளை மையமாக வைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த சில வாரங்களாக இந்த சூப்பர் ஹிட் சீரியலின் TRP ரேட்டிங் கூட இறங்கு முகமாகி விட்டது. இப்போது இழந்த விறுவிறுப்பை கூட்டுவதற்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஒரு புதிய கதாப்பாத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது கயலுக்கு மொட்டை போடும் விழா நடக்க, தாய் மாமா சார்பில் ஒருவர் வருவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

சமந்தா முதல் டி இமான் வரை – 2021 இல் விவாகரத்து செய்து கொண்ட பிரபலங்கள்!

இந்த ப்ரோமோவில் இடம்பிடித்துள்ள அந்த நபர் நடிகர் ரவிவர்மன் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. இவர் ‘நம்ம வீட்டு பொண்ணு’, ‘ராஜா ராணி 2’ போன்ற சீரியல்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் மீனாவின் தாய் மாமாவாக நடிகர் ரவிவர்மன் இணைய இருப்பதை உறுதிபடுத்தும் விதமாக சில புகைப்படங்கள் கூட வெளியாகி இருக்கிறது. இனி இவர் மூலம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம் ஸ்வாரசியமாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!