நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விதிமுறைகள் வெளியீடு !!!!

0
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விதிமுறைகள் வெளியீடு
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விதிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விதிமுறைகள் வெளியீடு !!!!

நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு ஆனது நாளை (செப் 13) நடைபெற உள்ளது. அந்த தேர்வுகளை எழுத உள்ள மாணவர்களுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

நீட் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடியாது ! 

நீட் தேர்வு :

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக இந்த தேர்வு பல மொழிகளில் நடைபெறும்.

நாளை இந்த நீட் தேர்வானது மாணவர்களுக்கு நடைபெற உள்ளது. நீட் தேர்வு ஆனது எப்போதும் கடும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கொண்டதாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் மாணவர்களுக்கு தேர்வுக்குரிய விதிமுறைகள் தேசிய தேர்வு முகாமையால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.
நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் :
  • நாளை பகல் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நாடு முழுவதும் 155 நகரங்களில் நடைபெற உள்ளது.
  • மாணவர்கள் காலை 11 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.
  • தேர்வு மையத்துக்கு வரும் போது, ஹால் டிக்கெட் மற்றும் உடல்நலன் குறித்த மருத்துவச் சான்று கட்டாயம்.
  • ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தின் படி, மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை கட்டாயம்.
  • வெளிப்படைத்தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டில் கட்டாயம்.
  • நீட் விண்ணப்ப படிவத்தில் உள்ள Passport Size புகைப்படம் ஒன்றையும் உடன் எடுத்து வர வேண்டும்.
  • 50 மி. அளவுள்ள கிருமி நாசினி கட்டாயம்.
  • கிருமி நாசினியைக் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் அவசியம்.
  • முகக்கவசம் கட்டாயம்.
  • 6 அடி தனி மனித இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
  • தேர்வு முடிந்த பின்னர், படிப்படியாக மாணவர்கள் வெளியேற்றப்படுவர்.
  • ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • தேர்வின் போது மேற்கண்ட நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!