ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!

0
ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!
ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!
ஆதார் கார்டில் உள்ள போட்டோவை மாற்ற வேண்டுமா? முழு விவரங்கள் இதோ!

ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தையும் மாற்றிக்கொள்ளும்படியான வசதி தற்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, எப்படி எளிமையாக புகைப்படத்தை மாற்றிக்கொள்வது என்பது தொடர்பான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு புகைப்படம்:

இந்தியாவில் உள்ள அனைத்து குடி மக்களுக்கும் ஆதார் கார்டு முக்கியமான அடையாள அட்டையாக விளங்கி வருகிறது. அரசின் நலத் திட்டங்களை பெறுவதில் இருந்து வங்கி சேவைகள் அனைத்திற்க்கும் ஆதார் கார்டு மிகவும் அவசியமாகிவிட்டது. அதாவது, இந்த ஆதார் அட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படுகிறது. மேலும், ஆதார் அட்டையில் உள்ள மொபைல் எண், பெயர், முகவரி என அனைத்துமே சரியாக இருக்க வேண்டும். அதாவது, ஆதார் அட்டைக்கு போட்டோ எடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் பலருக்கும் ஆதார் அட்டையில் அவர்களின் குழந்தை புகைப்படம் தான் இருக்கும்.

Exams Daily Mobile App Download

இதனால், பல இடங்களில் ஆதார் கார்டை காட்டுவதற்கே தயங்குகின்றனர். இந்நிலையில், ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது எப்படி ஆன்லைன் மூலமாகவே ஆதார் அட்டையில் உள்ள புகைப்படங்களை மாற்றலாம் என்பதை பார்க்கலாம். அதாவது, ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற நினைப்பவர்கள் UIDAI-இன் அதிகாரப்பூர்வமான  https://uidai.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய திட்டம் அறிமுகம்!

பின்பு, அந்த படிவத்தினை நிரப்பி உங்களுக்கு அருகிலுள்ள ஆதார் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும். பின்பு, புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை ஆதார் மையங்களில் கொடுக்க வேண்டும். இதன் பின்னர், ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். இதனையடுத்து, புகைப்படம் மாற்றியமைக்கப்பட்ட ஆதார் அட்டை உங்களது வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!