NCRTC தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!

0
NCRTC தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!
NCRTC தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!
NCRTC தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!

National Capital Region Transport Corporation (NCRTC) என்கிற தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழக நிறுவனத்தில் சமீபத்தில் Group General Manager (Operations) பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (29.04.2022) இறுதி நாளாகும் எனவே தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

NCRTC வேலைவாய்ப்பு விவரங்கள்:

தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) வெளியிட்ட அறிவிப்பில் Group General Manager (Operations) பணிக்கு என்று ஒரு காலிப்பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர் IRSEE / IRSSE / IRTS போன்ற ரயில்வே துறையில் குறைந்தது 18 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்கள் pay-scale Level 14 என்கிற ஊதிய அளவின்படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200 வரை ஊதியம் பெற்றவர் அல்லது பெறுபவர் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது தவிர ரயில்வே துறையில் Operation and Maintenance of trains பிரிவுகளில் 5 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம். Group General Manager (Operations) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

மேலும் இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள Career Cell, HR Department, National Capital Region Transport Corporation Ltd, Gati Shakti Bhawan, INA, New Delhi-110023 என்கிற முகவரிக்கு 29.4.2022ம் தேதிக்குள் வந்து சேரும்படி தபால் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்க நாளை (29.04.2022) இறுதி நாளாகும் எனவே தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

NCRTC Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!