ஜே.இ.இ தேர்வு மோசடி வலைதளங்கள் – தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!!

0
ஜே.இ.இ தேர்வு மோசடி வலைதளங்கள் - தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!!
ஜே.இ.இ தேர்வு மோசடி வலைதளங்கள் - தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!!
ஜே.இ.இ தேர்வு மோசடி வலைதளங்கள் – தேசிய தேர்வு முகமை எச்சரிக்கை!!

ஜே.இ.இ முதன்மை தேர்வு தொடர்பான ஏராளமான போலி வலைதளங்கள் இணையத்தில் உலவுவதால் மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

ஜே.இ.இ தேர்வு:

ஜே.இ.இ முதன்மை தேர்வு முதல் கட்டம் வரும் பிப்ரவரி 23 முதல் 26ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. எப்போதும் பொதுவாக வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் முதல் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு மாதங்களில் நடைபெற இருக்கிறது.

தமிழக அரசின் “தமிழ்ச் செம்மல்” விருது – மதுரை காமராசர் பல்கலை பேராசிரியர் தேர்வு!!

விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஒரு முறையோ அல்லது நான்கு முறைகளோ தேர்வை எழுதிக்கொள்ளலாம். மத்திய அரசின் உயர்மட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்வு தான் ஜே.இ.இ ஆகும்.

போலி வலைதளங்கள்:

ஜே.இ.இ தேர்வு தொடர்பான பல்வேறு போலி வலைதளங்கள் இணையத்தில் இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “மாணவர்கள் போலி வலைத்தளங்களில் விண்ணப்ப பதிவேற்றம் செய்வது, கட்டணங்களை செலுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு!!!

2021ம் கல்வி ஆண்டிற்கான ஜே.இ.இ மெயின் தேர்வின் ஆன்லைன் முகவரியாக jeeguide.co.in என்ற முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானது. மேலும் அதில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தும் போலியானது.

அதிகாரபூர்வ தளம்:

தேசிய தேர்வு வாரியம் இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரபூர்வ இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in முகவரியில் மாணவர்கள் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், 8287471852, 81783598485, 9650173668, 9599676953 மற்றும் 8882356803 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் & சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!