தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு!!!

1
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு -பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு!!!
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு -பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு!!!
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு -பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நாளை முதல் துவங்க உள்ளதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று:

உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா நோய்த்தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் கடந்த கல்வியாண்டு இறுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகிறது.

TNPSC குரூப் 1 வினா, விடைத்தாள் குளறுபடி – நிபுணர் குழு அமைப்பு!!

தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ளதால் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனர் நேரில் ஆய்வு:

சென்னையில் ஷெனாய் நகரில் உள்ள திரு.வி.க உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்து பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அதில், “கல்வி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பயன்படுத்த கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது.

30 நிமிடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி – பிப்.1 முதல் ‘தட்கல் புக்கிங்’ அறிமுகம்!!

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும், சமூக இடைவெளியை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. How can a child face the public exam by learning through the online classes for 7 months and learning in the school for 3 months.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!