கர்ப்பமாக இருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

0
கர்ப்பமாக இருக்கும்
கர்ப்பமாக இருக்கும் "நாம் இருவர் நமக்கு இருவர்" சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து மழை!
கர்ப்பமாக இருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி மதிப்பு உள்ள நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து பிரபலமான ராஷ்மி தற்போது கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை ராஷ்மி

தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் பல ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியல்களில் சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் மக்களிடம் எளிதில் சென்றடைகிறது. அவ்வாறு முன்னணி சீரியல்களில் ஒன்று தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். இந்த சீரியலில் முதல் பாகம் கொரோனா ஊரடங்கிற்கு முன் ஒளிபரப்பானது. மக்களின் பெரிய ஆதரவுடன் ஒளிபரப்பாகி வந்தது, ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்டது.

புது மாப்பிள்ளையாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ அருண் பிரசாத் – வைரலாகும் புகைப்படம்!

அதன் பின் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது. அதில் ரட்சிதா கதாநாயகியாக நடிக்கிறார். அதற்கு முன் முதல் சீசனில் ரக்ஷா மற்றும் ராஷ்மி என இரு கதாநாயகிகள் நடித்து வந்தனர். இதில் நடிகை ராஷ்மி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு பிறகு, ராஜபார்வை சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

Vijay TV Bigg Boss 5 Promo | ‘இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என் வாழ்க்கை’ – மனம் திறந்த ராஜு!

இந்நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் சீரியல் நடிகைகள் கர்ப்பமாக இருக்கும் செய்தி அதிகமாக வெளியாகி வருகிறது. முந்தைய காலத்தில் நடிகைகள் குழந்தை பெற்றுக் கொண்டால் நடிப்பு துறையில் இருந்து விலகி விடுவார்கள். ஆனால் தற்போது காலமாற்றம் காரணமாக சீரியல் நடிகைகள், குழந்தை பெற்றுக் கொண்டு தொடர்ந்து சீரியலில் நடித்து முன் உதாரணமாக இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!