புது மாப்பிள்ளையாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ அருண் பிரசாத் – வைரலாகும் புகைப்படம்!

0
புது மாப்பிள்ளையாக மாறிய 'பாரதி கண்ணம்மா' அருண் பிரசாத் - வைரலாகும் புகைப்படம்!
புது மாப்பிள்ளையாக மாறிய 'பாரதி கண்ணம்மா' அருண் பிரசாத் - வைரலாகும் புகைப்படம்!
புது மாப்பிள்ளையாக மாறிய ‘பாரதி கண்ணம்மா’ அருண் பிரசாத் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருண் பிரசாத் தற்போது புது மாப்பிள்ளை போல பட்டு வேஷ்டி, சட்டையணிந்து எடுத்துகொண்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் அருண்

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் கிட்டத்தட்ட 690 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய ஒரு முக்கியமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் டிவியின் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் எக்கச்சக்கமான பார்வையாளர்களின் கவனம் பெற்று எப்போதும் TRP ரேட்டிங்கில் முதன்மையான இடத்தை பிடித்து வருகிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் கதைக்களம், இயக்குனர், நடிகர், நடிகைகள் என்பது மறுக்கமுடியாத ஒன்றாகும்.

Vijay TV Bigg Boss 5 Promo | ‘இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என் வாழ்க்கை’ – மனம் திறந்த ராஜு!

அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியாக கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வரை தனது பங்களிப்பை கொடுத்து வரும் நடிகர் அருண் பிரசாத். யதார்த்த நடிப்புக்கு பெயர் போன நடிகர் அருண் பிரசாத் வெவ்வேறு விதமான கதாப்பாத்திரங்களாக மாறி பாரதி ரோலுக்கு தேவையான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் நடிகர் அருண் பிரசாத் நடிப்பிலும் அதனை வெளிப்படுத்த அதற்காக ரசிகர்களிடம் இருந்து விமர்சனங்களையும் அவ்வப்போது பெற்று வருவது வழக்கம்.

கண்ணம்மாவை வேறு ஒரு நபருடன் பார்த்து சந்தேகிக்கும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பங்கள்!

மற்ற நடிகர், நடிகைகளை போலவே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் அருண் பிரசாத் தற்போது ‘பாரதி கண்ணம்மா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து புது மாப்பிள்ளை போல காட்சியளிக்கும் நடிகர் அருண் பிரசாத்திற்கு ரசிகர்களிடம் இருந்து தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!