நடிகை வனிதாவின் மகன் நடித்துள்ள திரைப்படம் – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!

0
நடிகை வனிதாவின் மகன் நடித்துள்ள திரைப்படம் - வாழ்த்தி வரும் ரசிகர்கள்!
நடிகை வனிதாவின் மகன் நடித்துள்ள திரைப்படம் - வாழ்த்தி வரும் ரசிகர்கள்!
நடிகை வனிதாவின் மகன் நடித்துள்ள திரைப்படம் – வாழ்த்தி வரும் ரசிகர்கள்!

நடிகை வனிதா விஜயகுமார் அவரது இரண்டு மகள்கள் உடன் வசித்து வருகிறார். இருப்பினும் வனிதா தொடர்ந்து அவரது மகன் விஜய் ஸ்ரீ ஹரி பற்றி உருக்கமாக பேசி வருகிறார். பிக் பாஸ் வீட்டிலேயே அவரை பற்றி பேசி இருந்தார் வனிதா. தற்போது தன்னுடைய மகன் ஸ்ரீஹரி பிறந்தநாளையொட்டி நடிகை வனிதா விஜயகுமார் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் ஸ்ரீஹரி வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதாவின் மகனும் நடிகர் தான்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகர் குடும்பமான விஜயகுமார் – மஞ்சுளாவின் மகள் வனிதா விஜய குமார் பங்கேற்றுள்ளார். இவர் சந்திரலேகா படத்தில் தொடங்கி, மாணிக்கம், ஹெய்டர் பிரதர் (மலையாளம்), தேவி (தெலுங்கு), நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு படத்தில் நடித்துள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை வனிதா விஜயகுமார் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்த நிலையில், மகன் ஸ்ரீஹரி தந்தையுடன் இருந்து வருகிறார்.

Exams Daily Mobile App Download

மகன் ஸ்ரீஹரி தன்னுடன் தான் இருக்க வேண்டும் என வனிதா அப்பொழுது பெற்றோருடனும் கணவருடனும் சண்டையிட்டார். ஆனால், ஸ்ரீஹரி தனக்கு தந்தை ஆகாஷுடன் இருக்கவே விருப்பம் என தெரிவித்து அவருடன் இருந்து வருகிறார். மகள் மட்டும் வனிதாவுடன் வசித்து வருகிறார். நேற்று ஸ்ரீஹரிக்கு 21-வது பிறந்தநாள். இதனையொட்டி, மகன் ஸ்ரீஹரியின் பிறந்தநாளுக்காக நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ரீஹரியின் புகைப்படங்களை பகிர்ந்து வனிதா கூறியது ‘என்னுடைய முதல் காதலே, காதல் எப்போதும் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டது.

ஒரு தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்பு என்பது மற்ற எந்த அன்பையும் விட பரிசுத்தமானது என தனது பதிவில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் வனிதா. ஸ்ரீஹரி தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டே நடிப்பிலும் களமிறங்கியுள்ளார். மேலும் நண்பர்களுடன் இணைந்து அவர் குறும்படங்களில் நடித்து வருகிறார். அதற்கான பதிவுகளை அவ்வப்போது தன்னுடைய இணையத்தில் பதிவிட்டு வருகிறார். வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி பற்றி பலருக்கும் தெரியாத தகவல் என்னவென்றால் அவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் என்பது தான். அவர் கார்த்தியின் சகுனி படத்தில் சிறு வயது கார்த்தியாக நடித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!